• Jan 07 2025

அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் மீளாய்வு - அரசாங்கத்தின் அவசர தீர்மானங்கள்

Chithra / Dec 31st 2024, 1:31 pm
image


2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். 

இதன்படி சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. 

அத்துடன் குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபை நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஆளணியை மீளாய்வு செய்து இன்றியமையாத ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆளணியை மீள நிலைப்படுத்தி உயர் சேவையைப் பெறுவதற்கும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான அலுவலர் குழுவை நியமிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஏற்பாடுகளை ஆய்வுசெய்து, கட்டாயமாக திருத்தம் செய்ய வேண்டிய பிரிவுகள் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய பிரிவுகள் தொடர்பான விதந்துரைகள் அடங்கிய விபரமான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக தனியான குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் மீளாய்வு - அரசாங்கத்தின் அவசர தீர்மானங்கள் 2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த சட்ட மூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதேவேளை ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபை நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஆளணியை மீளாய்வு செய்து இன்றியமையாத ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன் பிரகாரம் சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆளணியை மீள நிலைப்படுத்தி உயர் சேவையைப் பெறுவதற்கும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையிலான அலுவலர் குழுவை நியமிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.மேலும் ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் ஏற்பாடுகளை ஆய்வுசெய்து, கட்டாயமாக திருத்தம் செய்ய வேண்டிய பிரிவுகள் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய பிரிவுகள் தொடர்பான விதந்துரைகள் அடங்கிய விபரமான அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக தனியான குழுவொன்றை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement