• Nov 26 2024

நல்லூரில் அமைக்கப்பட்ட வீதித் தடைகள்...! பக்தர்கள் அதிருப்தி...! மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை..!

Sharmi / Aug 8th 2024, 2:21 pm
image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்ட வீதித் தடை தொடர்பில் மக்கள் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகமும் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட இணைப்பாளர் த. கனகராஜ்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியபாலயத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இவ் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்துப்பட்டுள்ளது. 

எனவே, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 09.08.2024(வெள்ளிக்கிழமை) மு.ப. 11.30 மணிக்கு இல 42, கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்  ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




நல்லூரில் அமைக்கப்பட்ட வீதித் தடைகள். பக்தர்கள் அதிருப்தி. மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை. யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்திற்கு முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் அமைக்கப்பட்ட வீதித் தடை தொடர்பில் மக்கள் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகமும் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட இணைப்பாளர் த. கனகராஜ்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையினால் பொதுமக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாதை தடை தொடர்பில் பல தரப்பினராலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியபாலயத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இவ் ஆணைக்குழுவினால் கவனம் செலுத்துப்பட்டுள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு 09.08.2024(வெள்ளிக்கிழமை) மு.ப. 11.30 மணிக்கு இல 42, கோவில் வீதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்  ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement