• Nov 23 2024

மயிலத்தமடு மாதவனை போராட்ட வழக்கில் கைதான பல்கலை மாணவர்கள் விடுதலை...!

Sharmi / Jun 3rd 2024, 4:12 pm
image

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த கார்த்தினை மாதம் 05 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து  சித்தாண்டியில் கவனயீர்ப்பு பேரணியொன்றை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பேரணியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய வேளை வந்தாறுமூலை, களுவன்கேணி பகுதியில் இடைமறித்த சந்திவெளி பொலிஸார் அவர்களில் ஆறு பேரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் நீதிபதி, குறித்த மாணவர்களை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரால் போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப்பத்திரிகையில் காணப்பட்ட முரண்பாடு, மேலும் குற்றச்சாட்டுக்களை முன்கொண்டு செல்வதற்கான எவ்வித முகாந்தரங்களும் இல்லை என்னும் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் 06 பேரும் ஏறாவூர் நீதிமன்றத்தினால்  இன்றைய தினம்  விடுதலை செய்யப்பட்டனர்.



மயிலத்தமடு மாதவனை போராட்ட வழக்கில் கைதான பல்கலை மாணவர்கள் விடுதலை. மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடந்த கார்த்தினை மாதம் 05 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து  சித்தாண்டியில் கவனயீர்ப்பு பேரணியொன்றை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.குறித்த பேரணியில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய வேளை வந்தாறுமூலை, களுவன்கேணி பகுதியில் இடைமறித்த சந்திவெளி பொலிஸார் அவர்களில் ஆறு பேரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் நீதிபதி, குறித்த மாணவர்களை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்தார்.இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரால் போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப்பத்திரிகையில் காணப்பட்ட முரண்பாடு, மேலும் குற்றச்சாட்டுக்களை முன்கொண்டு செல்வதற்கான எவ்வித முகாந்தரங்களும் இல்லை என்னும் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர்கள் 06 பேரும் ஏறாவூர் நீதிமன்றத்தினால்  இன்றைய தினம்  விடுதலை செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement