• Nov 26 2024

துபாயில் இருந்து 10 லட்சம் ரூபா ஒப்பந்தம்; கொழும்பை உலுக்கிய படுகொலைகள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Chithra / Jul 9th 2024, 3:05 pm
image

  

கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரியில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான வசந்த பெரேரா தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


2019ஆம் ஆண்டு டுபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவர்களாக இருந்த மாகதுரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்ததில் கிளப் வசந்த எனப்படும் வசந்த பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மாகதுரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபா பணமும் கிளப் வசந்தவிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.


கஞ்சிபானி இம்ரான் பல தடவைகள் கிளப் வசந்தவிடம் பணத்தை தருமாறு கோரியுள்ளார். ஆனால், அந்த பணத்தை கிளப் வசந்த கொடுக்க மறுத்துள்ளார்.


இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் கிளப் வசந்தவை கொலை செய்ய திட்டமிடப்பட்டு அது தோல்வியடைந்துள்ளது.


இவ்வாறானதொரு பின்னணியில், கிளப் வசந்த அதுருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 03 மாதங்களுக்கு திட்டமிடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த கொலையில் Tattoo நிலைய உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவர், பச்சை குத்திக்கொள்ளும் திறன் கொண்டவர் எனவும், ஆனால் அதற்கான ஸ்தாபனமொன்றை நடத்துவதற்கு பணம் அவரிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பர் ஊடாக வெளிநாட்டவர் ஒருவருடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.


டுபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் பத்து இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


Tattoo நிலையத்தின் திறப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்து, கிளப் வசந்த உட்பட பிரபலங்கள் சிலரை அழைக்குமாறு, வெளிநாட்டில் உள்ள நபர் Tattoo நிலைய உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.



அதற்கமைய, கிளப் வசந்தவை திறப்பு விழாவிற்கு வருமாறு சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்று கிளப் வசந்த, அவரது மனைவியும் பாடகியுமான கே.சுஜீவா உள்ளிட்டோர்  வந்துள்ளனர்.


இந்நிலையில் குறித்த நிலையத்திற்கு காரில் வந்த இருவர், 17 வினாடிகளில், சம்பந்தப்பட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.


அந்த துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் மற்றொரு நபர் ஒருவர் உயிரிழந்தனர். கிளப் வசந்தவின் மனைவி, பாடகி கே. சுஜீவா மற்றும் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கே.சுஜீவா மற்றும் மற்றுமொருவர் அத்துருகிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சுடப்பட்ட கே.சுஜீவாவின் ஒரு கால் பலத்த சேதமடைந்துள்ளது.


மேலும் அவர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கிளப் வசந்தாவின் மனைவியும் மற்றுமொரு பெண்ணும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கிளப் வசந்தவின் மனைவி நேற்று இரவு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதேவேளை, புலத்சிங்கள, அயகம, தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த நிலமொன்றில் இருந்து கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின்படி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துருகிரியில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்நிலையில், புலத்சிங்கள பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வேன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற கார் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இதேவேளை, அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

துபாயில் இருந்து 10 லட்சம் ரூபா ஒப்பந்தம்; கொழும்பை உலுக்கிய படுகொலைகள் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்   கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரியில் நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான வசந்த பெரேரா தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.2019ஆம் ஆண்டு டுபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவர்களாக இருந்த மாகதுரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை பொலிஸார் கைது செய்ததில் கிளப் வசந்த எனப்படும் வசந்த பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மாகதுரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபா பணமும் கிளப் வசந்தவிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.கஞ்சிபானி இம்ரான் பல தடவைகள் கிளப் வசந்தவிடம் பணத்தை தருமாறு கோரியுள்ளார். ஆனால், அந்த பணத்தை கிளப் வசந்த கொடுக்க மறுத்துள்ளார்.இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் கிளப் வசந்தவை கொலை செய்ய திட்டமிடப்பட்டு அது தோல்வியடைந்துள்ளது.இவ்வாறானதொரு பின்னணியில், கிளப் வசந்த அதுருகிரியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 03 மாதங்களுக்கு திட்டமிடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த கொலையில் Tattoo நிலைய உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவர், பச்சை குத்திக்கொள்ளும் திறன் கொண்டவர் எனவும், ஆனால் அதற்கான ஸ்தாபனமொன்றை நடத்துவதற்கு பணம் அவரிடம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பர் ஊடாக வெளிநாட்டவர் ஒருவருடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.டுபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் பத்து இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.Tattoo நிலையத்தின் திறப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்து, கிளப் வசந்த உட்பட பிரபலங்கள் சிலரை அழைக்குமாறு, வெளிநாட்டில் உள்ள நபர் Tattoo நிலைய உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.அதற்கமைய, கிளப் வசந்தவை திறப்பு விழாவிற்கு வருமாறு சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பை ஏற்று கிளப் வசந்த, அவரது மனைவியும் பாடகியுமான கே.சுஜீவா உள்ளிட்டோர்  வந்துள்ளனர்.இந்நிலையில் குறித்த நிலையத்திற்கு காரில் வந்த இருவர், 17 வினாடிகளில், சம்பந்தப்பட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.அந்த துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் மற்றொரு நபர் ஒருவர் உயிரிழந்தனர். கிளப் வசந்தவின் மனைவி, பாடகி கே. சுஜீவா மற்றும் நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கே.சுஜீவா மற்றும் மற்றுமொருவர் அத்துருகிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுடப்பட்ட கே.சுஜீவாவின் ஒரு கால் பலத்த சேதமடைந்துள்ளது.மேலும் அவர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. கிளப் வசந்தாவின் மனைவியும் மற்றுமொரு பெண்ணும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிளப் வசந்தவின் மனைவி நேற்று இரவு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை, புலத்சிங்கள, அயகம, தெல்மெல்ல பிரதேசத்தில் பாழடைந்த நிலமொன்றில் இருந்து கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின்படி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துருகிரியில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர். கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், புலத்சிங்கள பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வேன் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் சென்ற கார் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இதேவேளை, அதுருகிரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement