• May 03 2024

ஒரு கிலோ திராட்சை ரூ.1800! பழங்களின் விலையை கேட்டு அதிர்ச்சியடையும் இலங்கையர்கள்!

Chithra / Jan 4th 2023, 7:29 pm
image

Advertisement

அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

பழச் சந்தையில் நெல்லி ஒரு கிலோ 1,200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 1,800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.


ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 600 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் 100 கிராம் தோடம் பழத்தின் விலை 120 ரூபாவாகவும், 100 கிராம் பச்சை அப்பிள் பழத்தின் விலை 180 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு தோடம் பழத்தின் விலை 600 ரூபா, ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆனைக்கொய்யா 500 ரூபாவாகவும் உள்ளது. ஒரு கிலோ கொய்யாவின் விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.


இறக்குமதிச் செலவு அதிகரிப்பினால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்துக் கட்டண உயர்வினால் உள்ளூர் பழங்களின் விலை அதிகரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ திராட்சை ரூ.1800 பழங்களின் விலையை கேட்டு அதிர்ச்சியடையும் இலங்கையர்கள் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களில் உள்ள பழங்கள் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.பழச் சந்தையில் நெல்லி ஒரு கிலோ 1,200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 1,800 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.ஒரு கிலோ அன்னாசிப்பழத்தின் விலை 600 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் 100 கிராம் தோடம் பழத்தின் விலை 120 ரூபாவாகவும், 100 கிராம் பச்சை அப்பிள் பழத்தின் விலை 180 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு தோடம் பழத்தின் விலை 600 ரூபா, ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ ஆனைக்கொய்யா 500 ரூபாவாகவும் உள்ளது. ஒரு கிலோ கொய்யாவின் விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.இறக்குமதிச் செலவு அதிகரிப்பினால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்துக் கட்டண உயர்வினால் உள்ளூர் பழங்களின் விலை அதிகரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement