• Apr 28 2024

கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா - உக்ரைன் அதிபர்

Chithra / Dec 11th 2022, 3:36 pm
image

Advertisement

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்த போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது. 

அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில் அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. 

இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது. 

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, "கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. 

குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்து விட்டனர். அந்ந நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை" என குற்றம்சாட்டினார்.


கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா - உக்ரைன் அதிபர் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்த போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது. அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில் அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, "கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்து விட்டனர். அந்ந நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை" என குற்றம்சாட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement