• May 09 2024

இராமநாதபுரம் கடற்கரை பகுதியில் தொடங்கியது சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி..!samugammedia

Sharmi / Jun 29th 2023, 2:38 pm
image

Advertisement

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் தொடங்கியது சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யில்  ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி  நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது.

2008 மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் ஆண்டு தோறும் சாகர் கவாச், ஆபரேஷன் ஆம்லா உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

அந்த வகையில் தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 6மணிக்கு  தொடங்கிய சாகர்கவாச் ஒத்திகைப் பயிற்சி நாளை மாலை 6மணி  வரை நடைபெற உள்ளது.

ஒத்திகையின் போது வேடமிட்டு தீவிரவாதிகள் போல் படகுகள் உள்ளிட்டவற்றில் ஊடுருவும் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்தவர்களை மரைன்போலீசார் கண்டுபிடித்துப் பிடிக்கின்றனர். 

இன்று இராமேஸ்வரம் பாம்பன் மற்றும் மண்டபம் கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில்  தீவிரவாதிகள் போல் ஊடுருவியவர்களை பிடிக்க தொடர்ந்து மரைன் போலீசார் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இதே போல் கடலூர், தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்ட மாவட்டங்களில் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்று வருகிறது.


இராமநாதபுரம் கடற்கரை பகுதியில் தொடங்கியது சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி.samugammedia இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் தொடங்கியது சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.இந்தியாவின் தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யில்  ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கி  நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 13 கடலோர மாவட்டங்களில் ஆபரேஷன் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது.2008 மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் ஆண்டு தோறும் சாகர் கவாச், ஆபரேஷன் ஆம்லா உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 6மணிக்கு  தொடங்கிய சாகர்கவாச் ஒத்திகைப் பயிற்சி நாளை மாலை 6மணி  வரை நடைபெற உள்ளது.ஒத்திகையின் போது வேடமிட்டு தீவிரவாதிகள் போல் படகுகள் உள்ளிட்டவற்றில் ஊடுருவும் கடற்படை, கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்தவர்களை மரைன்போலீசார் கண்டுபிடித்துப் பிடிக்கின்றனர். இன்று இராமேஸ்வரம் பாம்பன் மற்றும் மண்டபம் கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில்  தீவிரவாதிகள் போல் ஊடுருவியவர்களை பிடிக்க தொடர்ந்து மரைன் போலீசார் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.இதே போல் கடலூர், தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்ட மாவட்டங்களில் ஒத்திகைப் பயிற்சி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement