• May 21 2024

மொட்டு கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அடாவடி – ஜனாதிபதியிடம் முறையிட்ட சாகர காரியவசம் samugammedia

Chithra / Jun 17th 2023, 4:23 pm
image

Advertisement


பொதுஜன பெரமுன கட்சியின் பரிந்துரையின் அடிப்படையில் சில நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களை, நீக்குவதற்கு அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு சமரசம் செய்யுமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பொதுஜன பெரமன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தற்போது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களே இவ்வாறு செயற்படுவதாக சாகர காரியவசம் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கக் கட்சித் தலைவர்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்திய விசேட சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமது தொழிற்சங்கத் தலைவர்களை துன்புறுத்தும் அமைச்சர்களும் தற்போது துளிர்விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஜனாதிபதியிடம் இந்த விடயத்தில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்யுமாறு கோரிய போது, தான் மத்தியஸ்தம் செய்து இவ்வாறான 

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மொட்டு கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் அடாவடி – ஜனாதிபதியிடம் முறையிட்ட சாகர காரியவசம் samugammedia பொதுஜன பெரமுன கட்சியின் பரிந்துரையின் அடிப்படையில் சில நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்களை, நீக்குவதற்கு அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு சமரசம் செய்யுமாறு ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக பொதுஜன பெரமன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தற்போது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களே இவ்வாறு செயற்படுவதாக சாகர காரியவசம் குறிப்பிடுகின்றார்.அரசாங்கக் கட்சித் தலைவர்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் நடத்திய விசேட சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தமது தொழிற்சங்கத் தலைவர்களை துன்புறுத்தும் அமைச்சர்களும் தற்போது துளிர்விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே ஜனாதிபதியிடம் இந்த விடயத்தில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்யுமாறு கோரிய போது, தான் மத்தியஸ்தம் செய்து இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Advertisement

Advertisement

Advertisement