• Jun 26 2024

ரணிலிடம் சரணடைந்தார் சஜித்...!அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு - தீடீர் அறிவிப்பு.! samugammedia

Sharmi / May 13th 2023, 2:40 pm
image

Advertisement

நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டு ஒரு பொதுவான தீர்மானங்களை எடுப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவினை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்பு சபைகளுக்கு, தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை அறிவிக்கும் செயலமர்வு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று (13) நடைபெற்றது.

நாட்டில் சரியான விடயங்கள் நடக்கும் போது அதனை பார்த்துக் கொண்டு இருக்காது, நல்லதை நல்லது என்று சொல்ல வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

தமது கொள்கை நிலைப்பாடுகள் எவ்வளவுதான் முரண்பட்டாலும், நாட்டின் பொதுக் கடமைக்காக ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பதவிகளைப் பெறுவதற்காக அல்ல என்றும் நாட்டிற்கு மதிப்பு சேர்க்க வேண்டும் என தெரிவித்த சஜித் பிரேமதாச  நாட்டுக்காக தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற செயலாளர்நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரணிலிடம் சரணடைந்தார் சஜித்.அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு - தீடீர் அறிவிப்பு. samugammedia நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டு ஒரு பொதுவான தீர்மானங்களை எடுப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவினை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்பு சபைகளுக்கு, தெரிவு செய்யப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை அறிவிக்கும் செயலமர்வு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் இன்று (13) நடைபெற்றது.நாட்டில் சரியான விடயங்கள் நடக்கும் போது அதனை பார்த்துக் கொண்டு இருக்காது, நல்லதை நல்லது என்று சொல்ல வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.தமது கொள்கை நிலைப்பாடுகள் எவ்வளவுதான் முரண்பட்டாலும், நாட்டின் பொதுக் கடமைக்காக ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.பதவிகளைப் பெறுவதற்காக அல்ல என்றும் நாட்டிற்கு மதிப்பு சேர்க்க வேண்டும் என தெரிவித்த சஜித் பிரேமதாச  நாட்டுக்காக தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற செயலாளர்நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement