• May 05 2024

திங்கள் முதல் அரச அலுவலகங்களில் ஏற்படவுள்ள மாற்றம்...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / May 13th 2023, 2:46 pm
image

Advertisement

அரச ஊழியர்கள் திங்கட்கிழமை (15) முதல் அலுவலகங்களுக்குள் பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் தொற்று உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் காரணமாக, அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் விடயங்களில் விசேட சுற்றறிக்கைகள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டிருந்த போதிலும், தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலையில் அதற்கான தேவைகள் இல்லாத காரணத்தினால் இப்புதிய சுற்றுரிருபம் திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படவிருப்பதாக அமைச்சின் செயலாளர் கே. டி. என்.ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

 அதன்படி, அமைச்சினால் வெளியிடப்பட்ட 01.10.2021 திகதியிட்ட சுற்றறிக்கையின் விதிகள் 15.05.2023 முதல் இரத்துச் செய்யப்படுவதாகவும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் புதிய சுற்றுநிருப விதிகளின்படி செயற்படுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள் முதல் அரச அலுவலகங்களில் ஏற்படவுள்ள மாற்றம். வெளியான அறிவிப்பு.samugammedia அரச ஊழியர்கள் திங்கட்கிழமை (15) முதல் அலுவலகங்களுக்குள் பிரவேசிக்கும் போதும் வெளியேறும் போதும் கைவிரல் அடையாள இயந்திரங்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் தொற்று உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் காரணமாக, அரச ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கும் விடயங்களில் விசேட சுற்றறிக்கைகள் மூலம் நிவாரணம் வழங்கப்பட்டிருந்த போதிலும், தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலையில் அதற்கான தேவைகள் இல்லாத காரணத்தினால் இப்புதிய சுற்றுரிருபம் திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படவிருப்பதாக அமைச்சின் செயலாளர் கே. டி. என்.ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார். அதன்படி, அமைச்சினால் வெளியிடப்பட்ட 01.10.2021 திகதியிட்ட சுற்றறிக்கையின் விதிகள் 15.05.2023 முதல் இரத்துச் செய்யப்படுவதாகவும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் புதிய சுற்றுநிருப விதிகளின்படி செயற்படுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement