• May 21 2024

இலங்கையில் பாரிய துறைமுக வளாகத்தை அமைக்கின்றதா சீனா?? samugammedia

Chithra / May 13th 2023, 2:48 pm
image

Advertisement

உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில் கடன் திருப்பி செலுத்தலை நிறுத்தியுள்ள இலங்கை தற்போது பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வகுத்து வருகின்றது.

இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் ஒரு பெரிய தளவாட வளாகத்தில், 392 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டைக் கொண்ட சீனா வணிக குழுவின் முதலீடொன்று முன்னெடுக்கப்படுகின்றது. இது தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதல் பாரிய வெளிநாட்டு முதலீடாகும்.

தளவாட மையத்திட்டம் இலங்கையின் வருமாதத்திட்டம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொண்டு செல்லும், இது நாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாக உருவெடுக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி டுபாய்க்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான கடற்போக்குவரத்துப் பாதையில் ஆழ்கடல் துறைமுகமான கொழும்பில் இந்த வளாகத்தை நிர்மாணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தில் சீன நிறுவனம் 70சதவீத பங்குகளைக்கொண்டிருக்கும்.

இத்திட்டத்தை தெற்காசியாவின் மிகப்பெரிய தளவாட மையமாக விவரித்த அந்நிறுவனம், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதை நிர்மாணித்து நிறுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது.அதேநேரம், இலங்கையின் தெற்கு முனையில் உள்ள ஹம்பாந்தோட்டாவில் உள்ள துறைமுக வளாகத்தையும் நிர்வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு வரை ஒரு தசாப்த காலம் நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட வெள்ளையானை திட்டங்களில் ஒன்றாக அந்த துறைமுகம் கருதப்படுகின்றது.

இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த கடன்பொறி என்று பலர் விமர்சித்த திட்டங்களுக்காக ராஜபக்ஷ சீனாவிடம் இருந்து பெருமளவு கடன் வாங்கினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக 2017ஆம் ஆண்டு சீனாவிடம் இருந்து பெறப்பட்ட பாரிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதனை 99வருட குத்தகைக்கு 1.12பில்லியன் டொலர்களுக்கு அந்நிறுவனத்திடம் இலங்கை ஒப்படைத்தது.

சீனா தனது பிரம்மாண்டமான ஒரேமண்டலம் மற்றும் முன்முயற்சியின் கீழ் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பல திட்டங்களுக்காக பில்லியன் கணக்கான கடன்களை வழங்கியுள்ள.இது நாடுகளை கடனில் மூழ்கடிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் துறைமுகங்களை அணுகுவதன் மூலம் இந்தியப்பெருங்கடலில் சீனா ஒரு கடற்படை நன்மையைப் பெறுவது குறித்து அண்டை நாடான இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இலங்கையின் துறைமுகங்கள் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாதென இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாரிய துறைமுக வளாகத்தை அமைக்கின்றதா சீனா samugammedia உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில் கடன் திருப்பி செலுத்தலை நிறுத்தியுள்ள இலங்கை தற்போது பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வகுத்து வருகின்றது.இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் ஒரு பெரிய தளவாட வளாகத்தில், 392 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டைக் கொண்ட சீனா வணிக குழுவின் முதலீடொன்று முன்னெடுக்கப்படுகின்றது. இது தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதல் பாரிய வெளிநாட்டு முதலீடாகும்.தளவாட மையத்திட்டம் இலங்கையின் வருமாதத்திட்டம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொண்டு செல்லும், இது நாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாக உருவெடுக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அதுமட்டுமன்றி டுபாய்க்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான கடற்போக்குவரத்துப் பாதையில் ஆழ்கடல் துறைமுகமான கொழும்பில் இந்த வளாகத்தை நிர்மாணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தில் சீன நிறுவனம் 70சதவீத பங்குகளைக்கொண்டிருக்கும்.இத்திட்டத்தை தெற்காசியாவின் மிகப்பெரிய தளவாட மையமாக விவரித்த அந்நிறுவனம், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதை நிர்மாணித்து நிறுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது.அதேநேரம், இலங்கையின் தெற்கு முனையில் உள்ள ஹம்பாந்தோட்டாவில் உள்ள துறைமுக வளாகத்தையும் நிர்வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.2015ஆம் ஆண்டு வரை ஒரு தசாப்த காலம் நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட வெள்ளையானை திட்டங்களில் ஒன்றாக அந்த துறைமுகம் கருதப்படுகின்றது.இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த கடன்பொறி என்று பலர் விமர்சித்த திட்டங்களுக்காக ராஜபக்ஷ சீனாவிடம் இருந்து பெருமளவு கடன் வாங்கினார்.ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக 2017ஆம் ஆண்டு சீனாவிடம் இருந்து பெறப்பட்ட பாரிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதனை 99வருட குத்தகைக்கு 1.12பில்லியன் டொலர்களுக்கு அந்நிறுவனத்திடம் இலங்கை ஒப்படைத்தது.சீனா தனது பிரம்மாண்டமான ஒரேமண்டலம் மற்றும் முன்முயற்சியின் கீழ் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பல திட்டங்களுக்காக பில்லியன் கணக்கான கடன்களை வழங்கியுள்ள.இது நாடுகளை கடனில் மூழ்கடிப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.இலங்கையின் துறைமுகங்களை அணுகுவதன் மூலம் இந்தியப்பெருங்கடலில் சீனா ஒரு கடற்படை நன்மையைப் பெறுவது குறித்து அண்டை நாடான இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளன.இந்நிலையில் இலங்கையின் துறைமுகங்கள் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாதென இலங்கை வலியுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement