• Nov 22 2024

இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை - தமக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு சஜித் தரப்பு கோரிக்கை

Chithra / Feb 8th 2024, 11:09 am
image

 

இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு வாய்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாடியுள்ளது.

ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ள அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி, 

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தது.

தேர்தலுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி, இந்தியாவில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அரசியல் ஆதாயத்தை நோக்கமாக கொண்டு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அதனை கோரியுள்ள நிலையில் அதற்கு இந்தியாவும் சாதகமாக பதிலளித்துள்ளது.

தென்னிலங்கை அரசியலில் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒருவரையொருவர் விஞ்சும் அளவிற்கு போட்டி நிலவும் நிலையில் இந்திய அதிகாரிகளுடன் முதலில் கலந்துரையாட தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலை தெரிவித்துள்ளது.

இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை - தமக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு சஜித் தரப்பு கோரிக்கை  இந்திய அதிகாரிகளுடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையில் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்றதொரு வாய்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாடியுள்ளது.ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இந்தியா சென்றுள்ள அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான் தேசிய மக்கள் சக்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் ஆகியோருடன் கலந்துரையாடியிருந்தது.தேர்தலுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி, இந்தியாவில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையில் அரசியல் ஆதாயத்தை நோக்கமாக கொண்டு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அதனை கோரியுள்ள நிலையில் அதற்கு இந்தியாவும் சாதகமாக பதிலளித்துள்ளது.தென்னிலங்கை அரசியலில் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒருவரையொருவர் விஞ்சும் அளவிற்கு போட்டி நிலவும் நிலையில் இந்திய அதிகாரிகளுடன் முதலில் கலந்துரையாட தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement