• May 03 2024

ஹர்ஷ டி சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் சஜித் வருத்தம்.! சபாநாயகரிடம் முறைப்பாடு.! samugammedia

Sharmi / Jun 8th 2023, 2:03 pm
image

Advertisement

நிதிக் குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தாமதமாக நியமிக்கப்பட்டாலும் அதனை தாம் பாராட்டுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,  இதில் ஜனாதிபதி தலையிட்டு அவரை தெரிவு செய்தமை வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் பல்வேறு தரப்பினரின் இடையூறுகள் மற்றும் சதித்திட்டங்கள் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக முன்மொழிவுகளை முன்வைத்ததிருந்தாகவும் இறுதியில் உண்மை வெற்றிபெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிக்குழுவின் தலைவர் நியமனத்தை நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியே செய்ய வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலையியற் கட்டளையில் சிக்கல் இருப்பதாகவும், ஆனால் இந்த நியமனம் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகளை மீறி, சட்ட விரோதமாக தற்காலிக தலைவர்களை நியமித்து, கட்டளைச் சட்டங்களை கொண்டு வருவதற்கு அனுமதி வழங்குவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரின் கடமை அது என்றும் எனவே இந்த விடயத்தில் சபாநாயகர் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஹர்ஷ டி சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் சஜித் வருத்தம். சபாநாயகரிடம் முறைப்பாடு. samugammedia நிதிக் குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா தாமதமாக நியமிக்கப்பட்டாலும் அதனை தாம் பாராட்டுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,  இதில் ஜனாதிபதி தலையிட்டு அவரை தெரிவு செய்தமை வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்திருந்தார்.நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் பல்வேறு தரப்பினரின் இடையூறுகள் மற்றும் சதித்திட்டங்கள் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக முன்மொழிவுகளை முன்வைத்ததிருந்தாகவும் இறுதியில் உண்மை வெற்றிபெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.நிதிக்குழுவின் தலைவர் நியமனத்தை நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியே செய்ய வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலையியற் கட்டளையில் சிக்கல் இருப்பதாகவும், ஆனால் இந்த நியமனம் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.நாடாளுமன்ற நிலையியற் கட்டளை விதிகளை மீறி, சட்ட விரோதமாக தற்காலிக தலைவர்களை நியமித்து, கட்டளைச் சட்டங்களை கொண்டு வருவதற்கு அனுமதி வழங்குவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரின் கடமை அது என்றும் எனவே இந்த விடயத்தில் சபாநாயகர் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement