• Nov 28 2024

அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை நிறைவேற்ற முடியாது! - திறைசேரி அதிரடி அறிவிப்பு

Chithra / Jul 8th 2024, 4:36 pm
image

 

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வட் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும் பொதுமக்களை நசுக்கி இதுபோன்ற கோரிக்கையை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது எனவும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.

அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்பதுடன், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக, அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.


 

அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை நிறைவேற்ற முடியாது - திறைசேரி அதிரடி அறிவிப்பு  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வட் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும் பொதுமக்களை நசுக்கி இதுபோன்ற கோரிக்கையை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது எனவும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.தற்போதைய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வருடம் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என்பதுடன், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடு குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை மீளாய்வு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக, அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement