• May 10 2024

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு...!செந்தில் தொண்டமான் அறிவிப்பு...! samugammedia

Sharmi / Nov 17th 2023, 11:38 am
image

Advertisement

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சௌமியபவானில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு, தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வருமானத்தின் அடிப்படையிலும், வாழ்க்கை செலவுப் புள்ளியின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

எனினும் இவ்விடயத்தில், பெருந்தோட்ட தொழில் அமைச்சு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காது அலட்சியம் செய்து வருகின்றது.

எனவே, எதிர்வரும் காலத்தில், நேரடியாக பெருந்தோட்ட முதலாளிமார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

முதலாளிமார் சம்மேளனம், இணக்கம் ஒன்றுக்கு வர மறுத்தால், காங்கிரஸ் தமது தொழிற்சங்க போராட்டங்கள் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தை பெற்றுக்கொடுக்கும் என  செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு.செந்தில் தொண்டமான் அறிவிப்பு. samugammedia பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.கொழும்பு சௌமியபவானில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு, தேயிலை மற்றும் இறப்பர் ஏற்றுமதி வருமானத்தின் அடிப்படையிலும், வாழ்க்கை செலவுப் புள்ளியின் அடிப்படையிலும் வழங்கப்பட வேண்டும் என்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.எனினும் இவ்விடயத்தில், பெருந்தோட்ட தொழில் அமைச்சு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காது அலட்சியம் செய்து வருகின்றது. எனவே, எதிர்வரும் காலத்தில், நேரடியாக பெருந்தோட்ட முதலாளிமார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.முதலாளிமார் சம்மேளனம், இணக்கம் ஒன்றுக்கு வர மறுத்தால், காங்கிரஸ் தமது தொழிற்சங்க போராட்டங்கள் மூலம், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தை பெற்றுக்கொடுக்கும் என  செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement