• Apr 28 2024

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வரும் ஆனால் வராது...! சபையில் சிறீதரன் எம்.பி...!samugammedia

Sharmi / Nov 14th 2023, 5:51 pm
image

Advertisement

வடிவேல் பாணியில்  10000 ரூபா சம்பள அதிகரிப்பு வரும் ஆனால் வராது என்ற நிலைப்பாட்டையே ஜனாதிபதி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். 

வரவு செலவு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்றையதினம்(14) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

"அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு ஜனவரி மாதம் வழங்கப்படும். ஆனால் சித்திரை மாதத்திற்கு பிறகு தான் அவர்கள் அதை எதிர்பார்க்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

ஒரு  நாட்டில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்ற போது  அது நம்பிக்கை தன்மை மிகுந்ததாக இருக்க வேண்டும் . அதை விடுத்து இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகள் அரசாங்கத்திடம் இருக்கும் வரை அரசாங்கம் சரியான ஒரு பாதையை தெரிவு செய்ய முடியாது. அரச உத்தியோகத்தர்களும் சரியான பாதைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.  

இதேவேளை இலங்கையில் சமாதானத்திற்கான கதவுகள் இறுக பூட்டபட்டுள்ளதோடு நல்லிணக்கத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழ் மக்கள் துன்புறுத்த படமாட்டார்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் , போர் குற்றங்கள் இனி வரும் காலங்களிலும் நடக்காது என்பதற்கான எந்த விதமான உத்தரவாதங்களும் இந்த நாட்டில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இறந்து போன உயிர்களுக்கு காசால் விலை பேசப்படுகிறதே தவிர அவர்களுக்கான நியாயம் கிடைப்பதற்காக என்ன செய்ய போகின்றார்கள் என்று இந்த நாட்டின் தலைவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.  

அதேவேளை வாய் பேச முடியாத உயிரினங்களின் வாய்களில் வெடி மருந்தை வைத்து அவற்றை கொலை செய்கின்ற கொடூரம் மட்டக்களப்பு மயிலத்தமடுவில் நடைபெறுகின்றது. 

அந்த விவசாயிகள் தெருக்களில் குந்திகொண்டு இருக்கின்றார்கள். இந்த நாடு மயிலத்தமடுவில் தன்னுடைய பாவத்திற்கான சம்பளத்தை பெற்றுக்கொண்டு இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வரும் ஆனால் வராது. சபையில் சிறீதரன் எம்.பி.samugammedia வடிவேல் பாணியில்  10000 ரூபா சம்பள அதிகரிப்பு வரும் ஆனால் வராது என்ற நிலைப்பாட்டையே ஜனாதிபதி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்றையதினம்(14) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,"அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு ஜனவரி மாதம் வழங்கப்படும். ஆனால் சித்திரை மாதத்திற்கு பிறகு தான் அவர்கள் அதை எதிர்பார்க்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஒரு  நாட்டில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்ற போது  அது நம்பிக்கை தன்மை மிகுந்ததாக இருக்க வேண்டும் . அதை விடுத்து இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகள் அரசாங்கத்திடம் இருக்கும் வரை அரசாங்கம் சரியான ஒரு பாதையை தெரிவு செய்ய முடியாது. அரச உத்தியோகத்தர்களும் சரியான பாதைக்கு கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.  இதேவேளை இலங்கையில் சமாதானத்திற்கான கதவுகள் இறுக பூட்டபட்டுள்ளதோடு நல்லிணக்கத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் தமிழ் மக்கள் துன்புறுத்த படமாட்டார்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் , போர் குற்றங்கள் இனி வரும் காலங்களிலும் நடக்காது என்பதற்கான எந்த விதமான உத்தரவாதங்களும் இந்த நாட்டில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இறந்து போன உயிர்களுக்கு காசால் விலை பேசப்படுகிறதே தவிர அவர்களுக்கான நியாயம் கிடைப்பதற்காக என்ன செய்ய போகின்றார்கள் என்று இந்த நாட்டின் தலைவர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.  அதேவேளை வாய் பேச முடியாத உயிரினங்களின் வாய்களில் வெடி மருந்தை வைத்து அவற்றை கொலை செய்கின்ற கொடூரம் மட்டக்களப்பு மயிலத்தமடுவில் நடைபெறுகின்றது. அந்த விவசாயிகள் தெருக்களில் குந்திகொண்டு இருக்கின்றார்கள். இந்த நாடு மயிலத்தமடுவில் தன்னுடைய பாவத்திற்கான சம்பளத்தை பெற்றுக்கொண்டு இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement