• May 03 2024

அரச ஊழியர்களின் சம்பளம் மூன்று மாதங்களுக்கு வெட்டு?

Sharmi / Dec 15th 2022, 3:27 pm
image

Advertisement

உள்ளூராட்சி தேர்தலுக்காக சுமார் 20 இலட்சம் செலவு, பொலிஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண சபை செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என சுமார் 15,000 பேர் ஓய்வு பெற்றுள்ளமையினால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் நடத்தப்பட்டால், சுமார் 8,700 உறுப்பினர்கள் கொண்ட குழு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் என்றும், அவற்றினை பராமரிக்க 32,000 இலட்சம் பணம் தேவைப்படும் என தெரிவித்திருந்த அவர், நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா? இல்லையா என்று இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

டிசெம்பர் 14ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெரிவு செய்யப்பட்ட 50 உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தேர்தலை நடத்தினால் கிட்டத்தட்ட இருபது பில்லியன் செலவாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். அரச ஊழியர்களின் சம்பளம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்பட வேண்டும். அந்த வருமானத்தை ஈட்டுவதற்கு மீண்டும் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


அரச ஊழியர்களின் சம்பளம் மூன்று மாதங்களுக்கு வெட்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக சுமார் 20 இலட்சம் செலவு, பொலிஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண சபை செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என சுமார் 15,000 பேர் ஓய்வு பெற்றுள்ளமையினால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தேர்தல் நடத்தப்பட்டால், சுமார் 8,700 உறுப்பினர்கள் கொண்ட குழு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் என்றும், அவற்றினை பராமரிக்க 32,000 இலட்சம் பணம் தேவைப்படும் என தெரிவித்திருந்த அவர், நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்று இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.டிசெம்பர் 14ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெரிவு செய்யப்பட்ட 50 உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தேர்தலை நடத்தினால் கிட்டத்தட்ட இருபது பில்லியன் செலவாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். அரச ஊழியர்களின் சம்பளம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்பட வேண்டும். அந்த வருமானத்தை ஈட்டுவதற்கு மீண்டும் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement