• Oct 02 2024

185 ரூபாவாக குறையவுள்ள டொலர் - ஜனாதிபதி அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 20th 2023, 2:04 pm
image

Advertisement

இன்னும் சில நாட்களில் இலங்கை திவாலான நாடாக பிரகடனப்படுத்தப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டவுடன், இலங்கை ரூபாய் படிப்படியாக 200 அல்லது 185 ஆக குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் சூழலை சர்வதேச நாணய நிதியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.


பொருளாதாரம் ஒப்பீட்டளவில் ஸ்தீரமடைந்துள்ளது. ஆகவே, இலங்கை தற்போது வங்குரோத்து நிலையில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். அத்துடன் ஆசிய வலயத்தில் இலங்கை பொருளாதாரத்தில் ஸ்தீரமான நாடு என்ற உறுதிப்பாட்டை பெறும்.

2048ஆம் ஆண்டு இலங்கை சுபீட்சமான நாடு என்ற இலக்கை அடைய 25 வருடகால நிலையான கொள்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும்.


7 மாத காலத்துக்குள் அனைத்து கட்டமைப்புக்களும் ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கப் பெறுகின்றன.

பொருளாதார பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளன. ஆகவே, நாம் வங்குரோத்து நிலையில் தற்போது இல்லை.

கடன் நிவாரணங்களுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன். எதிர்வரும் நாட்களில் சிறந்த வெற்றி எமக்கு கிடைக்கப்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்

185 ரூபாவாக குறையவுள்ள டொலர் - ஜனாதிபதி அறிவிப்பு SamugamMedia இன்னும் சில நாட்களில் இலங்கை திவாலான நாடாக பிரகடனப்படுத்தப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டவுடன், இலங்கை ரூபாய் படிப்படியாக 200 அல்லது 185 ஆக குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அலரி மாளிகையில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.பொருளாதார பாதிப்பில் இருந்து மூச்சு விடும் சூழலை சர்வதேச நாணய நிதியம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.பொருளாதாரம் ஒப்பீட்டளவில் ஸ்தீரமடைந்துள்ளது. ஆகவே, இலங்கை தற்போது வங்குரோத்து நிலையில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் முன்னேற்றம் உறுதிப்படுத்தப்படும். அத்துடன் ஆசிய வலயத்தில் இலங்கை பொருளாதாரத்தில் ஸ்தீரமான நாடு என்ற உறுதிப்பாட்டை பெறும்.2048ஆம் ஆண்டு இலங்கை சுபீட்சமான நாடு என்ற இலக்கை அடைய 25 வருடகால நிலையான கொள்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும்.7 மாத காலத்துக்குள் அனைத்து கட்டமைப்புக்களும் ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கப் பெறுகின்றன.பொருளாதார பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைவடைந்துள்ளன. ஆகவே, நாம் வங்குரோத்து நிலையில் தற்போது இல்லை.கடன் நிவாரணங்களுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கிறேன். எதிர்வரும் நாட்களில் சிறந்த வெற்றி எமக்கு கிடைக்கப்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement