• May 05 2024

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மருத்துவமனையில் சேர்ப்பு...! சிறைக் கைதிகள் உரிமைகள் மையம் விடுத்த கோரிக்கை...!samugammedia

Sharmi / Jan 26th 2024, 12:51 pm
image

Advertisement

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையான சாந்தன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றையதினம்(25)  காலை திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு சிறைக் கைதிகள் உரிமைகள் மையத்தினரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதேவேளை, சாந்தன் தன்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை உடனிருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்கெனவே  சாந்தன்இ  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் மருத்துவமனையில் சேர்ப்பு. சிறைக் கைதிகள் உரிமைகள் மையம் விடுத்த கோரிக்கை.samugammedia ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலையான சாந்தன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்றையதினம்(25)  காலை திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனிற்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளதால் அவருக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கைகள் திருச்சி சிறப்பு முகாமில் எடுக்கப்படாததால் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக உரிய நடவடிக்களை எடுக்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு சிறைக் கைதிகள் உரிமைகள் மையத்தினரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதேவேளை, சாந்தன் தன்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.குறித்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள தனது தாயாரை உடனிருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென ஏற்கெனவே  சாந்தன்இ  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement