• Nov 21 2024

பாடசாலை வளாகத்திற்குள் போதைப்பொருள் சோதனை நடவடிக்கை - தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

Chithra / Jan 26th 2024, 12:56 pm
image

 

பாடசாலை வளாகத்திற்குள் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை  முன்னெடுக்கவேண்டாம் என கல்வித்துறை தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

யுக்திய நடவடிக்கைக்கு சமாந்திரமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும்,  பொலிஸாரும்  பாடசாலை பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள நிலையில்  தொழிற்சங்கங்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இவ்வாறான விசாரணைகளால் மாணவர்கள் உடல் உள ரீதியாக பாதிக்கப்படுவார்கள்,

அவர்களின் கற்றல் நடவடிக்கைககள் பாதிக்கப்படலாம் என இலங்கை ஆசியர்கள் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளில் இருந்து போதைப்பொருளை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால் முழுமையான திட்டமொன்றின் மூலமே போதைப்பொருளை ஒழிக்க முடியும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தினால்  அகற்ற முடியாது என  அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் உள்ளவர்களின் தேவைக்காக, அவர்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக இவ்வாறான திட்டங்கள் காலத்திற்கு காலம் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பாடசாலைகளில் போதைப்பொருள் விசாரணைகளை முன்னெடுக்கும் திட்டத்தை தங்கள் தொழிற்சங்கம் கடுமையாக எதிர்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாரோ ஒருவரின் பிரச்சாரத்திற்காக சிறுவர்களை பலிகடாவாக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல மாதங்களிற்கு முன்னர் மாணவர்கள் ஐஸ் கொண்டுவந்தனர் என தெரிவித்து மாணவர்களின் புத்தகபைகளை சோதனையிட்டனர். ஆனால் எதனையும் கண்டுபிடிக்கவில்லை எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை வளாகத்திற்குள் போதைப்பொருள் சோதனை நடவடிக்கை - தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு  பாடசாலை வளாகத்திற்குள் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை  முன்னெடுக்கவேண்டாம் என கல்வித்துறை தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.யுக்திய நடவடிக்கைக்கு சமாந்திரமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும்,  பொலிஸாரும்  பாடசாலை பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள நிலையில்  தொழிற்சங்கங்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.இவ்வாறான விசாரணைகளால் மாணவர்கள் உடல் உள ரீதியாக பாதிக்கப்படுவார்கள்,அவர்களின் கற்றல் நடவடிக்கைககள் பாதிக்கப்படலாம் என இலங்கை ஆசியர்கள் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.பாடசாலைகளில் இருந்து போதைப்பொருளை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால் முழுமையான திட்டமொன்றின் மூலமே போதைப்பொருளை ஒழிக்க முடியும், ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தினால்  அகற்ற முடியாது என  அவர் தெரிவித்துள்ளார்.ஆட்சியில் உள்ளவர்களின் தேவைக்காக, அவர்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக இவ்வாறான திட்டங்கள் காலத்திற்கு காலம் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை பாடசாலைகளில் போதைப்பொருள் விசாரணைகளை முன்னெடுக்கும் திட்டத்தை தங்கள் தொழிற்சங்கம் கடுமையாக எதிர்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.யாரோ ஒருவரின் பிரச்சாரத்திற்காக சிறுவர்களை பலிகடாவாக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பல மாதங்களிற்கு முன்னர் மாணவர்கள் ஐஸ் கொண்டுவந்தனர் என தெரிவித்து மாணவர்களின் புத்தகபைகளை சோதனையிட்டனர். ஆனால் எதனையும் கண்டுபிடிக்கவில்லை எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement