• May 03 2024

ஞானம் அற்ற இனவாதி சரத் வீரசேகர..! சைவத்திற்கு சட்டம் தேவையில்லை - சிவசேனை தலைவர் காட்டம் samugammedia

Chithra / May 9th 2023, 11:50 am
image

Advertisement

தென்னிலங்கையின், புகழ்பெற்ற இனவாதியான சரத்வீரசேகரவிற்கு மதம் மற்றும் சட்டம் தொடர்பாக போதிய விளக்கம் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிதாக வந்தவர் புத்தர் என்றும் புதிதாக வந்தவர் இயேசு என்றும்  புதிதாக வந்தவர் முகமது என தெரிவித்த மறவன்புலவு க. சச்சிதானந்தன் இவர்கள் சார்ந்த வழிபாட்டிடங்களை அமைப்பதற்கு சட்டங்கள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக சைவ சமயத்திற்கு சட்டங்கள் அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சிவபூமி பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர்.

நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள்.

தாயின் கருவறையில் வினைவழிப் பிறந்த மனிதரைக் கடவுளாகத் தமிழர் கொள்வதில்லை, சைவர் கொள்வதில்லை.

புத்தரையும் இயேசுவையும் முகமதுவையும் வழிபாட்டிடங்கள் அமைத்தே வழிபட வேண்டும்.

சைவர்களுக்கு தமிழர்களுக்கு நிலமே கோயில் நீரே கோயில் காற்றே கோயில் வானமே கோயில் நெருப்பே கோயில்.

எனவே தமிழர்கள் சைவர்களின் கோயில்கள், அரசுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டப்பட்டவை அல்ல. எத்திசைச் செல்லினும் சைவர்களுக்கு அத்திசை கோயிலே என்றும் குறிப்பிட்டள்ளார்.

குறிப்பாக வினை வழி கருவறையில் பிறந்து தெளிவு பெற்றவர்கள் போதித்தவர்கள் வழிவந்த மதங்கள் யாவும் இலங்கைக்கு வந்தேறி மதங்கள் என்றும் சச்சிதானந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்த மதத்தவர் குடியேற்றம், சைவ மக்களின் நிலம் அபகரிப்பு, தொல்லியல் போர்வை, இவை காரணங்களாக அமையத் தான்தோன்றியாக அமைந்த சைவக் கோயில்களின் அருகே புத்த கோயில்களை அமைக்கிறார்கள் சரத்த வீரசேகரர் உள்ளிட்ட புத்த மேலாதிக்க வாதிகள்.

படைத் துறையில் வல்லவராக இருப்பவர், தத்துவத் துறையில் வல்லவராக சட்டத் துறையில் வல்லவராக இருப்பதில்லை என்பதைத் திரு சரத்த வீரசேகரரின் கூற்றுகள் தெளிவாகக் காட்டியுள்ளன.

இவர்கள் கேட்கிறார்கள், தென் இலங்கையில் அமைந்த சைவக் கோயில்கள் சட்டத்துக்குள் அமைந்தனவா? என்றும் சாடியுள்ளார்.


ஞானம் அற்ற இனவாதி சரத் வீரசேகர. சைவத்திற்கு சட்டம் தேவையில்லை - சிவசேனை தலைவர் காட்டம் samugammedia தென்னிலங்கையின், புகழ்பெற்ற இனவாதியான சரத்வீரசேகரவிற்கு மதம் மற்றும் சட்டம் தொடர்பாக போதிய விளக்கம் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு புதிதாக வந்தவர் புத்தர் என்றும் புதிதாக வந்தவர் இயேசு என்றும்  புதிதாக வந்தவர் முகமது என தெரிவித்த மறவன்புலவு க. சச்சிதானந்தன் இவர்கள் சார்ந்த வழிபாட்டிடங்களை அமைப்பதற்கு சட்டங்கள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.மாறாக சைவ சமயத்திற்கு சட்டங்கள் அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை சிவபூமி பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர்.நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள்.தாயின் கருவறையில் வினைவழிப் பிறந்த மனிதரைக் கடவுளாகத் தமிழர் கொள்வதில்லை, சைவர் கொள்வதில்லை.புத்தரையும் இயேசுவையும் முகமதுவையும் வழிபாட்டிடங்கள் அமைத்தே வழிபட வேண்டும்.சைவர்களுக்கு தமிழர்களுக்கு நிலமே கோயில் நீரே கோயில் காற்றே கோயில் வானமே கோயில் நெருப்பே கோயில்.எனவே தமிழர்கள் சைவர்களின் கோயில்கள், அரசுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டப்பட்டவை அல்ல. எத்திசைச் செல்லினும் சைவர்களுக்கு அத்திசை கோயிலே என்றும் குறிப்பிட்டள்ளார்.குறிப்பாக வினை வழி கருவறையில் பிறந்து தெளிவு பெற்றவர்கள் போதித்தவர்கள் வழிவந்த மதங்கள் யாவும் இலங்கைக்கு வந்தேறி மதங்கள் என்றும் சச்சிதானந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.புத்த மதத்தவர் குடியேற்றம், சைவ மக்களின் நிலம் அபகரிப்பு, தொல்லியல் போர்வை, இவை காரணங்களாக அமையத் தான்தோன்றியாக அமைந்த சைவக் கோயில்களின் அருகே புத்த கோயில்களை அமைக்கிறார்கள் சரத்த வீரசேகரர் உள்ளிட்ட புத்த மேலாதிக்க வாதிகள்.படைத் துறையில் வல்லவராக இருப்பவர், தத்துவத் துறையில் வல்லவராக சட்டத் துறையில் வல்லவராக இருப்பதில்லை என்பதைத் திரு சரத்த வீரசேகரரின் கூற்றுகள் தெளிவாகக் காட்டியுள்ளன.இவர்கள் கேட்கிறார்கள், தென் இலங்கையில் அமைந்த சைவக் கோயில்கள் சட்டத்துக்குள் அமைந்தனவா என்றும் சாடியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement