• May 17 2024

ஜூலி சங்கிற்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர..! முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்கிறார் சந்திம வீரக்கொடி! samugammedia

Chithra / Nov 23rd 2023, 10:28 am
image

Advertisement


தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு. இதுதொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினருர் சந்திம வீரக்கொடி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.

படவிளக்கம்

பாராளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர' இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக எச்சரிக்கை விடுக்க முடியுமா?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் படுகொலை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த படுகொலை தொடர்பில் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு  பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் முற்றிலும் தவறானது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவின் தன்னிச்சையான  தீர்மானங்களினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. 

ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.


ஜூலி சங்கிற்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகர. முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்கிறார் சந்திம வீரக்கொடி samugammedia தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு. இதுதொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினருர் சந்திம வீரக்கொடி சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளார்.படவிளக்கம்பாராளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர' இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு ஊடாக எச்சரிக்கை விடுக்க முடியுமாமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவின் படுகொலை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த படுகொலை தொடர்பில் துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. அத்துடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு  பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் முற்றிலும் தவறானது.தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவின் தன்னிச்சையான  தீர்மானங்களினால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமை மற்றும் ஒழுக்கவியல் குழு ஊடாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement