• May 20 2024

அதிவேக நெடுஞ்சாலைகளை விற்கமாட்டோம்; எந்த ஒரு ஊழியரினதும் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் உறுதி samugammedia

Chithra / Nov 23rd 2023, 10:26 am
image

Advertisement


அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பணிக்கு திரும்பி இருந்தனர்

குறித்த போராட்டமானது நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் எந்த ஒரு ஊழியரினதும் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது  என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் அதன் நிர்வாகத்தை எமது அமைச்சே முன்னெடுக்கின்றது. அந்த வகையில் எந்த ஊழியர்களின் தொழிலும் இழக்கப்பட மாட்டாது என்றார்


அதிவேக நெடுஞ்சாலைகளை விற்கமாட்டோம்; எந்த ஒரு ஊழியரினதும் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் உறுதி samugammedia அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை சுமார் 12 மணித்தியாலங்களின் பின்னர் நிறைவுக்கு வந்துள்ளது.குறித்த 12 மணி நேரத்தில், அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதனைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு நெடுஞ்சாலை பணியாளர்கள் பணிக்கு திரும்பி இருந்தனர்குறித்த போராட்டமானது நெடுஞ்சாலை வலையமைப்பை தனியார் மயமாக்குவதற்கான திட்டங்களை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டிருந்தது.இதேவேளை அதிவேக நெடுஞ்சாலைகளை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் எந்த ஒரு ஊழியரினதும் தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படாது  என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் அதன் நிர்வாகத்தை எமது அமைச்சே முன்னெடுக்கின்றது. அந்த வகையில் எந்த ஊழியர்களின் தொழிலும் இழக்கப்பட மாட்டாது என்றார்

Advertisement

Advertisement

Advertisement