• May 02 2024

'சரிகமப' நடுவர்களை கண்ணீர் மழையில் நனைத்து அரங்கை அதிர வைத்த மலையக சிறுமி! samugammedia

Chithra / Aug 6th 2023, 10:47 pm
image

Advertisement

 இந்திய தனியார் தமிழ் தொலைக்காட்சியான zee thamil இல் ஒளிபரப்பாகும் பாடல் போட்டி நிகழ்ச்சியான “சரிகமப“ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார்.

கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த மாணவி கனகராஜ் அசானி இன்றைய தினம் சரிகமப நிழ்ச்சியில் பாடினார்.

அவரது பாடலை கேட்ட நடுவர்கள் கண்கலங்கியதுடன், அவரை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பாடுவதற்கும் அனுமதியளித்துள்ளனர்.

'ராசாவே உன்ன நம்பி ஒரு ரோசாப்பூ' என்ற பாடலையே அசானி இன்று பாடியதுடன், எந்தவித இசை பயிற்சியும் முறையாக கற்றுக்கொண்டும் அவர் பாடவில்லை.


தமது தன்னம்பிக்கையையே இவர் பாடலாக வெளிப்படுத்தியிருந்தார். அசானி அவரது திறமையை மாத்திரம் இன்று வெளிப்படுத்தவில்லை இலங்கை வாழ் ஒட்டுமொத்த மலையக மக்களின் உணர்வுகளையும் அவர்களது துன்பகரமான வாழ்க்கையையும் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்த நிழ்ச்சியில் கருத்து தெரிவித்த அசானி,

வானொலியில் ஒளிபரப்பாகிய பாடல்களை சிறு வயது முதல் கேட்டு மாத்திரம் பாட கற்றுக்கொண்டதாகவும் தமது தாய் தந்தையரே பாடுவதற்கு ஊக்குவித்தாகவும் கூறினார்.

தமது மக்களுக்காகவும் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவுமே இந்த நிழ்ச்சியில் கடல் கடந்து வந்து பாட ஆசைப்பட்டதாகவும் அசானி கண்ணீருடன் கூறினார்.

அசானியின் திறமையை கண்டு நிகழ்ச்சியை பார்வையிட வந்த அனைவரும் கண்கலங்கியதுடன் மிகுந்த வரவேற்பையும் அளித்தனர்.

அசானி அடுத்துவரும் வாரங்களில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் சரிகமப நிழ்ச்சியில் தொடர்ந்து பாட அனுமதியளிக்க நடுவர்கள் தீர்மானிப்பார்கள் என எல்லோரும் எதிர்பார்த்துள்ளனர்.

'சரிகமப' நடுவர்களை கண்ணீர் மழையில் நனைத்து அரங்கை அதிர வைத்த மலையக சிறுமி samugammedia  இந்திய தனியார் தமிழ் தொலைக்காட்சியான zee thamil இல் ஒளிபரப்பாகும் பாடல் போட்டி நிகழ்ச்சியான “சரிகமப“ என்ற நிகழ்ச்சியில் இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார்.கண்டி, புஸ்ஸல்லாவையை சேர்ந்த மாணவி கனகராஜ் அசானி இன்றைய தினம் சரிகமப நிழ்ச்சியில் பாடினார்.அவரது பாடலை கேட்ட நடுவர்கள் கண்கலங்கியதுடன், அவரை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பாடுவதற்கும் அனுமதியளித்துள்ளனர்.'ராசாவே உன்ன நம்பி ஒரு ரோசாப்பூ' என்ற பாடலையே அசானி இன்று பாடியதுடன், எந்தவித இசை பயிற்சியும் முறையாக கற்றுக்கொண்டும் அவர் பாடவில்லை.தமது தன்னம்பிக்கையையே இவர் பாடலாக வெளிப்படுத்தியிருந்தார். அசானி அவரது திறமையை மாத்திரம் இன்று வெளிப்படுத்தவில்லை இலங்கை வாழ் ஒட்டுமொத்த மலையக மக்களின் உணர்வுகளையும் அவர்களது துன்பகரமான வாழ்க்கையையும் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எடுத்துக்காட்டியுள்ளார்.இந்த நிழ்ச்சியில் கருத்து தெரிவித்த அசானி,வானொலியில் ஒளிபரப்பாகிய பாடல்களை சிறு வயது முதல் கேட்டு மாத்திரம் பாட கற்றுக்கொண்டதாகவும் தமது தாய் தந்தையரே பாடுவதற்கு ஊக்குவித்தாகவும் கூறினார்.தமது மக்களுக்காகவும் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவுமே இந்த நிழ்ச்சியில் கடல் கடந்து வந்து பாட ஆசைப்பட்டதாகவும் அசானி கண்ணீருடன் கூறினார்.அசானியின் திறமையை கண்டு நிகழ்ச்சியை பார்வையிட வந்த அனைவரும் கண்கலங்கியதுடன் மிகுந்த வரவேற்பையும் அளித்தனர்.அசானி அடுத்துவரும் வாரங்களில் தொடர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் சரிகமப நிழ்ச்சியில் தொடர்ந்து பாட அனுமதியளிக்க நடுவர்கள் தீர்மானிப்பார்கள் என எல்லோரும் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement