• Nov 28 2024

புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்! ஜனாதிபதி ஆலோசனை

Chithra / Oct 1st 2024, 11:38 am
image


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள் அன்றி 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்பாகவே வெளியாகி இருந்ததெனவும், அந்தப் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம் ஜனாதிபதி ஆலோசனை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வினாத்தாள் பிரச்சினை தொடர்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றிருந்தது.இதன்போது 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகளை இரு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளை அறிவுறுத்தினார்.ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள் அன்றி 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்பாகவே வெளியாகி இருந்ததெனவும், அந்தப் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement