• Apr 26 2024

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

harsha / Dec 19th 2022, 1:31 pm
image

Advertisement

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் நடைபெற்றது.

  பரீட்சைக்கு மொத்தம் 334,698 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

இதேவேளை, கல்கமுவ எஹெதுவெவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பொறுப்பாசிரியர் ஒருவர் தவறான வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழு இன்று காலை கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் நடைபெற்றது.  பரீட்சைக்கு மொத்தம் 334,698 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.இதேவேளை, கல்கமுவ எஹெதுவெவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பொறுப்பாசிரியர் ஒருவர் தவறான வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழு இன்று காலை கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement