• Sep 17 2024

கடலுணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் கிழக்கு ஆளுநரால் திறந்துவைப்பு samugammedia

Chithra / Jul 16th 2023, 12:03 pm
image

Advertisement

வாகரை காயான்கேணியில் கடலுணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் கிழக்கு மாகாண சபையின் மேற்பார்வையின் கீழ் உள்ளுராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் இவ் கடைத் தொகுதி காயான்கேணி வட்டார ரீதியான முன்மொழிவின் பிரகாரம் வாகரை பிரதேச சபையால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் விற்பனை நிலையமானது வாகரை பிரதேசத்தில் உள்ள கடலுணவுகளை நுகர்வோருக்கு இலகுவாக சந்தைப்படுத்தும் நிலையமாக எதிர்காலத்தில் செயற்படும்.

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.வீரசுதாகரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனா.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் என்.மணிவண்ணன்,வாகரை பிரதேச செயலாளர் ஜீ.அருணன் ஆகியோர்களும் சிறப்பு அதிதிகளாக வாகரை வைத்தியசாலை வைத்தியர் எச்.எம்.ரி.சசிந்த ,வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.சில்வா,வாகரை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


கடலுணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் கிழக்கு ஆளுநரால் திறந்துவைப்பு samugammedia வாகரை காயான்கேணியில் கடலுணவுப் பொருட்கள் விற்பனை நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் கிழக்கு மாகாண சபையின் மேற்பார்வையின் கீழ் உள்ளுராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் இவ் கடைத் தொகுதி காயான்கேணி வட்டார ரீதியான முன்மொழிவின் பிரகாரம் வாகரை பிரதேச சபையால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இவ் விற்பனை நிலையமானது வாகரை பிரதேசத்தில் உள்ள கடலுணவுகளை நுகர்வோருக்கு இலகுவாக சந்தைப்படுத்தும் நிலையமாக எதிர்காலத்தில் செயற்படும்.கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையின் செயலாளர் எஸ்.வீரசுதாகரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனா.கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் என்.மணிவண்ணன்,வாகரை பிரதேச செயலாளர் ஜீ.அருணன் ஆகியோர்களும் சிறப்பு அதிதிகளாக வாகரை வைத்தியசாலை வைத்தியர் எச்.எம்.ரி.சசிந்த ,வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.சில்வா,வாகரை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement