• Nov 25 2024

ஜனாதிபதியாக ரணிலையும், பிரதமராக சஜித்தையும் களமிறக்க சிங்கப்பூரில் இரகசிய நகர்வு...!

Sharmi / Jun 7th 2024, 5:09 pm
image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஜனாதிபதி வேட்பாளராகவும் சஜித்தை  பிரதமர் வேட்பாளராகவும்  கொண்டு வர சிங்கப்பூரில்  திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் விடயமாக தேர்தல் ஆணையாளர் எதிர்வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதிக்கு இடையில்  ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  மற்றும் தேர்தல் எப்போது நடைபெற வேண்டும் என்ற விடயத்தையும், அக்டோபர் எட்டாம் திகதிக்கிடையில் தேர்தல் நடைபெறும் என்ற விடயத்தையும் கூறி இருக்கின்றார்கள்.

பெரும்பான்மை மக்கள் பொதுத் தேர்தல் தொடர்பாக இன்று ஒரு சலனத்துடன் ஆராய்ந்து கொண்டு இருக்கின்ற போது பல விடையங்கள் வெளி வந்திருக்கின்றன. வருகின்ற எட்டாம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடைய தற்போதைய குழுவினர் மற்றும் துமிந்த திசாநாயக்க மாபெரும் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் 

அதற்கு முன்னர் வருகின்ற ஆறாம் திகதி கஞ்சன விஜேசேகர மாத்திரையில் மாபெரும் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கின்றார். 

இதில் மொட்டுக் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதே நேரத்தில் மொட்டுக் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த கூட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என்று அதனுடைய தலைமை வலியுறுத்தியுள்ளது.

வருகின்ற 16ஆம் திகதிக்கிடையில் சஜித் பிரேமதாசாவுக்கும் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி அதில் ரணில் விக்ரமசிங்கவை  ஜனாதிபதி வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசாவை பிரதமர் வேட்பாளராகவும்  கொண்டு வருவதற்கான முயற்சியினை இரு பக்கத்தில் உள்ள சிரேஷ்ட  பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கப்பூரிலே முன்னெடுத்திருக்கின்றார்கள்.

ஆகவே 17-ஆம் திகதிக்கிடையில் ஒரு பொதுத் தேர்தல் தொடர்பான விடயம் காத்திரமாக முடிவு செய்யப்பட இருக்கிறதா? இல்லையா? என்பதை பற்றி நாம் காத்திருக்கின்றோம்.

இந்த விடயம் வந்ததன் பிறகு எமது கட்சியினுடைய நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.


ஜனாதிபதியாக ரணிலையும், பிரதமராக சஜித்தையும் களமிறக்க சிங்கப்பூரில் இரகசிய நகர்வு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஜனாதிபதி வேட்பாளராகவும் சஜித்தை  பிரதமர் வேட்பாளராகவும்  கொண்டு வர சிங்கப்பூரில்  திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதி தேர்தல் விடயமாக தேர்தல் ஆணையாளர் எதிர்வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதிக்கு இடையில்  ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  மற்றும் தேர்தல் எப்போது நடைபெற வேண்டும் என்ற விடயத்தையும், அக்டோபர் எட்டாம் திகதிக்கிடையில் தேர்தல் நடைபெறும் என்ற விடயத்தையும் கூறி இருக்கின்றார்கள்.பெரும்பான்மை மக்கள் பொதுத் தேர்தல் தொடர்பாக இன்று ஒரு சலனத்துடன் ஆராய்ந்து கொண்டு இருக்கின்ற போது பல விடையங்கள் வெளி வந்திருக்கின்றன. வருகின்ற எட்டாம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடைய தற்போதைய குழுவினர் மற்றும் துமிந்த திசாநாயக்க மாபெரும் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு முன்னர் வருகின்ற ஆறாம் திகதி கஞ்சன விஜேசேகர மாத்திரையில் மாபெரும் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கின்றார். இதில் மொட்டுக் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதே நேரத்தில் மொட்டுக் கட்சியை சேர்ந்தவர்கள் அந்த கூட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என்று அதனுடைய தலைமை வலியுறுத்தியுள்ளது.வருகின்ற 16ஆம் திகதிக்கிடையில் சஜித் பிரேமதாசாவுக்கும் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் இடையில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தி அதில் ரணில் விக்ரமசிங்கவை  ஜனாதிபதி வேட்பாளராகவும் சஜித் பிரேமதாசாவை பிரதமர் வேட்பாளராகவும்  கொண்டு வருவதற்கான முயற்சியினை இரு பக்கத்தில் உள்ள சிரேஷ்ட  பாராளுமன்ற உறுப்பினர்களும் சிங்கப்பூரிலே முன்னெடுத்திருக்கின்றார்கள்.ஆகவே 17-ஆம் திகதிக்கிடையில் ஒரு பொதுத் தேர்தல் தொடர்பான விடயம் காத்திரமாக முடிவு செய்யப்பட இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி நாம் காத்திருக்கின்றோம். இந்த விடயம் வந்ததன் பிறகு எமது கட்சியினுடைய நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement