• May 09 2024

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச்சூடு: பச்சிளம் குழந்தை உட்பட 17 பேர் உயிரிழப்பு!SamugamMedia

Sharmi / Feb 22nd 2023, 9:25 am
image

Advertisement

ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் சிக்கி பச்சிளம் குழந்தை, பிஷப் உள்பட 17பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்தநாள் அங்கு ஜனாதிபதிகள் தினம் என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 3-வது திங்கட்கிழமை இது கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படும். வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிறுடன் இந்த பொதுவிடுமுறை வருவதால் அமெரிக்க மக்கள் சுற்றுலா தலங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று 3 நாட்களை செலவிடுவர்.

இந்த நிலையில் ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது நாடு முழுவதும் அரங்கேறிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவை அதிரவைத்துள்ளது.

சிகாகோ நகரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒரு வயது பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் திருவிழா அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

அதேபோல் மிசிசிப்பி மாகாணத்தில் இரவு நேர கேளிக்கை விடுதி, சுப்பர் மார்க்கெட் உள்பட 4 வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

நியூஜெர்சி மாகாணத்தில் ஒருவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

டென்னிசி மாகாணத்தில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் நடந்த திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்ற பொலிஸ் அதிகாரியை 18 வயது சிறுவன் சுட்டுக்கொன்றுள்ளார்.

 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கத்தோலிக்க பிஷப் டேவிட் ஓ கெனோலின் வீட்டுக்கு புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.

அப்படி அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகமானோர்  படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச்சூடு: பச்சிளம் குழந்தை உட்பட 17 பேர் உயிரிழப்புSamugamMedia ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் சிக்கி பச்சிளம் குழந்தை, பிஷப் உள்பட 17பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்தநாள் அங்கு ஜனாதிபதிகள் தினம் என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 3-வது திங்கட்கிழமை இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படும். வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிறுடன் இந்த பொதுவிடுமுறை வருவதால் அமெரிக்க மக்கள் சுற்றுலா தலங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று 3 நாட்களை செலவிடுவர்.இந்த நிலையில் ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது நாடு முழுவதும் அரங்கேறிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவை அதிரவைத்துள்ளது. சிகாகோ நகரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒரு வயது பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் திருவிழா அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் பெண் உயிரிழந்துள்ளார். அதேபோல் மிசிசிப்பி மாகாணத்தில் இரவு நேர கேளிக்கை விடுதி, சுப்பர் மார்க்கெட் உள்பட 4 வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டனர்.நியூஜெர்சி மாகாணத்தில் ஒருவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். டென்னிசி மாகாணத்தில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தில் நடந்த திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்ற பொலிஸ் அதிகாரியை 18 வயது சிறுவன் சுட்டுக்கொன்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த கத்தோலிக்க பிஷப் டேவிட் ஓ கெனோலின் வீட்டுக்கு புகுந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.அப்படி அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகமானோர்  படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement