• Apr 28 2024

உலகில் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த நடிகர் ஷாருக்கான்..! samugammedia

Chithra / Apr 7th 2023, 6:25 pm
image

Advertisement

பொலிவுட் சினிமாவில் “கிங்” கான் ஆகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரின் நடிப்பில் தற்போது 'ஜவான்' திரைப்படம் உருவாகி வருகின்றது. 

அட்லீ இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் ஜூன் 2-ஆம் திகதி படத்தை வெளியிட உள்ளனர்.


இந்நிலையில், அமெரிக்க டைம்ஸ் பத்திரிகை வாசகர்களின் கருத்துக்கணிப்பின்படி தற்போது செல்வாக்குமிக்க டொப் 100 நபர்களுக்கான வாக்கெடுப்பில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். 

அதாவது 2023-ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த பட்டியலில் நடிகர் மைக்கேல் யோ, தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற பலரும் இடம்பெற்றிருந்தனர். 

இந்நிலையில் மொத்தம் பதிவான 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் மட்டும் 4% வாக்குகளைப் பெற்றதாக கூறப்படுகின்றது. 


இதனையடுத்து ஷாருக்கானுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலகில் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த நடிகர் ஷாருக்கான். samugammedia பொலிவுட் சினிமாவில் “கிங்” கான் ஆகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். இவரின் நடிப்பில் தற்போது 'ஜவான்' திரைப்படம் உருவாகி வருகின்றது. அட்லீ இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் ஜூன் 2-ஆம் திகதி படத்தை வெளியிட உள்ளனர்.இந்நிலையில், அமெரிக்க டைம்ஸ் பத்திரிகை வாசகர்களின் கருத்துக்கணிப்பின்படி தற்போது செல்வாக்குமிக்க டொப் 100 நபர்களுக்கான வாக்கெடுப்பில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அதாவது 2023-ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பில் உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி விட அதிக வாக்குகள் பெற்று ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த பட்டியலில் நடிகர் மைக்கேல் யோ, தடகள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா போன்ற பலரும் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் மொத்தம் பதிவான 1.2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் ஷாருக்கான் மட்டும் 4% வாக்குகளைப் பெற்றதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து ஷாருக்கானுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement