• May 19 2024

மீண்டும் அதிர்ச்சி...! அடுத்த வருடம் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...! விடுக்கப்பட்ட எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Oct 6th 2023, 11:03 am
image

Advertisement

இலங்கையில் அடுத்த வருடம் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்

உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு அரிசி கையிருப்பை பராமரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை கோழி இறைச்சியின் விலையை குறைக்கும் அரசின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது. கோழிப்பண்ணை உற்பத்தி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய முடிவுகள் கிடைக்காததே அதற்குக் காரணம்.

பாரியளவிலான கோழி உற்பத்தி நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சந்தையில் பொருட்களின் விலைகள் போதியளவு குறைவடையவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவும்  எச்சரித்துள்ளார்.

உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வரட்சி காரணமாக 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிர்ச்சி. அடுத்த வருடம் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம். விடுக்கப்பட்ட எச்சரிக்கை.samugammedia இலங்கையில் அடுத்த வருடம் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை கருத்தில் கொண்டு அரிசி கையிருப்பை பராமரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அதேவேளை கோழி இறைச்சியின் விலையை குறைக்கும் அரசின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது. கோழிப்பண்ணை உற்பத்தி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய முடிவுகள் கிடைக்காததே அதற்குக் காரணம்.பாரியளவிலான கோழி உற்பத்தி நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.சந்தையில் பொருட்களின் விலைகள் போதியளவு குறைவடையவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவும்  எச்சரித்துள்ளார்.உணவுப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.அத்துடன் அண்மைய நாட்களில் ஏற்பட்ட வரட்சி காரணமாக 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement