• Sep 17 2024

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பொதிகள் தொடர்பில் அதிர்ச்சி! samugammedia

Tamil nila / Jul 30th 2023, 8:09 am
image

Advertisement

அவுஸ்திரேலியாவில் இருந்து ஒன்லைன் மூலம் பொருட்களை பெற்றுக்கொண்டு இலங்கையில் உலர் உணவுகளை விநியோகிக்கும் நிறுவனமொன்றை நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது காலாவதியான சில பொருட்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சட்ட விதிமுறைகள் இன்றி பொருட்களை விற்பனை செய்ததால், சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு சீல் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, துறைமுகத்திற்கு அருகில் உள்ள இடமொன்றில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் வழங்கும் பொருட்களை இங்குள்ள அவர்களது பெறுநர்களுக்கான இந்த நிறுவனத்தினால் விநியோகிக்கப்படுகின்றன.

அதற்கமைய, குறித்த இடத்தை ஆய்வு செய்த வாடிக்கையாளர் சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், அந்த இடத்தில் காலாவதியான பல தேயிலை துாள் பொட்டலங்களை கண்டுபிடித்தனர்.

மேலதிக விசாரணையின் போது, ​​காலாவதியான தேங்காய் எண்ணெய் போத்தல்கள் மற்றும் திகதி மாற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தல்கள் என்பன காணப்பட்டன.

மாற்றப்பட்ட காலாவதி திகதிகளுடன் தொடர்புடைய தேங்காய் எண்ணெய் மீண்டும் விநியோகிக்கப்படுவதும் தெரியவந்தது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பொதிகள் தொடர்பில் அதிர்ச்சி samugammedia அவுஸ்திரேலியாவில் இருந்து ஒன்லைன் மூலம் பொருட்களை பெற்றுக்கொண்டு இலங்கையில் உலர் உணவுகளை விநியோகிக்கும் நிறுவனமொன்றை நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் நேற்று சுற்றிவளைத்துள்ளனர்.இதன்போது காலாவதியான சில பொருட்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். சட்ட விதிமுறைகள் இன்றி பொருட்களை விற்பனை செய்ததால், சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு சீல் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, துறைமுகத்திற்கு அருகில் உள்ள இடமொன்றில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.விசாரணையின் போது, ​​அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் வழங்கும் பொருட்களை இங்குள்ள அவர்களது பெறுநர்களுக்கான இந்த நிறுவனத்தினால் விநியோகிக்கப்படுகின்றன.அதற்கமைய, குறித்த இடத்தை ஆய்வு செய்த வாடிக்கையாளர் சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், அந்த இடத்தில் காலாவதியான பல தேயிலை துாள் பொட்டலங்களை கண்டுபிடித்தனர்.மேலதிக விசாரணையின் போது, ​​காலாவதியான தேங்காய் எண்ணெய் போத்தல்கள் மற்றும் திகதி மாற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தல்கள் என்பன காணப்பட்டன.மாற்றப்பட்ட காலாவதி திகதிகளுடன் தொடர்புடைய தேங்காய் எண்ணெய் மீண்டும் விநியோகிக்கப்படுவதும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

Advertisement