• Sep 17 2024

உறவினர் வீட்டுக்கு சென்று நீண்ட நாளுக்குபின் வீடு திரும்பிய உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி! யாழில் சம்பவம் samugammedia

Chithra / Oct 9th 2023, 1:22 pm
image

Advertisement


கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மூன்று கோவில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு உரிமையாளர்  உறவினர்களின் வீட்டுக்கு மட்டக்களப்புக்கு சென்று  நீண்ட நாளுக்கு பின் வருகை தந்து வீட்டினை திறந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு இருந்ததை அவதானித்த வீட்டு உரிமையாளர் குறித்த சம்பவம்தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்தனர்

குறித்த முறைப்பாட்டினை விசாரணை செய்த கோப்பாய் பொலிசார் நேற்றைய தினம் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதோடு குறித்த வீட்டில் திருடப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் உடும்பிராய் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் இருவர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதோடு தலைமறைவாகியுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்


கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விலையுயர்ந்த தொலைக்காட்சி, மின்மோட்டர், மடிக்கணினி மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசி, நவீன ரக கை மணிக்கூடு என்பன மீட்க்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு  பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உறவினர் வீட்டுக்கு சென்று நீண்ட நாளுக்குபின் வீடு திரும்பிய உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி யாழில் சம்பவம் samugammedia கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மூன்று கோவில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு உரிமையாளர்  உறவினர்களின் வீட்டுக்கு மட்டக்களப்புக்கு சென்று  நீண்ட நாளுக்கு பின் வருகை தந்து வீட்டினை திறந்து பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு இருந்ததை அவதானித்த வீட்டு உரிமையாளர் குறித்த சம்பவம்தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்தனர்குறித்த முறைப்பாட்டினை விசாரணை செய்த கோப்பாய் பொலிசார் நேற்றைய தினம் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதோடு குறித்த வீட்டில் திருடப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் உடும்பிராய் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் இருவர் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதோடு தலைமறைவாகியுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விலையுயர்ந்த தொலைக்காட்சி, மின்மோட்டர், மடிக்கணினி மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசி, நவீன ரக கை மணிக்கூடு என்பன மீட்க்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு  பொலிசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement