• May 19 2024

பாதசாரி கடவையை கடந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! தமிழர் பகுதியில் சோகம் samugammedia

Chithra / Jun 15th 2023, 12:47 pm
image

Advertisement

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை  இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில்  ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான முகைதீன் பாவா சித்தியா எனும் பெண் பஸ் வண்டியில் தனது ஊருக்கு செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

சம்பவத்தில்  மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் போதையுடன் காணப்பட்டதோடு, காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும்  விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

பாதசாரி கடவையை கடந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி. தமிழர் பகுதியில் சோகம் samugammedia மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று புதன்கிழமை  இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில்  ஓட்டமாவடி - காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான முகைதீன் பாவா சித்தியா எனும் பெண் பஸ் வண்டியில் தனது ஊருக்கு செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.இவ் விபத்து சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.சம்பவத்தில்  மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் போதையுடன் காணப்பட்டதோடு, காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.மேலும்  விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement