• Nov 26 2024

கொழும்பில் பழைமை வாய்த்த மரங்கள் தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tamil nila / May 25th 2024, 9:47 pm
image

கொழும்பு நகரில் அபாயகரமானது என அடையாளப்படுத்தப்படாத அதிகளவான மரங்களே, முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கின்றது.

அதாவது அடையாளம் காணப்பட்ட 50 முதல் 150 வருடங்கள் பழைமை வாய்த்த சுமார் 200 மரங்கள் ஆபத்தானவை என தாம் முன்னெடுத்த ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபை குறிப்பிடுகின்றது.

இந்த மரங்களில் பெரும்பாலானவற்றில் சிதைவுகள் காணப்பட்டமையினால், அவை முறிந்து விழும் அபாயத்தில் இருந்ததாக மாநகர சபை கூறுகின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மரங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதுடன், ஏனைய மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, கடந்த சில நாட்களில் வீசிய கடும் காற்று காரணமாக, கொழும்பு மாநகர எல்லைக்குள் மாத்திரம் சுமார் 50 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

அபாயகரமானது என இதற்கு முன்னர் அடையாளப்படுத்தப்படாத மரங்களே இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிடுகின்றது.

இந்த மரங்களில் அதிகளவானவை, வேரோடு முறிந்து வீழ்ந்துள்ளமை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சபை கூறுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தெளிவூட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட ஆய்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பில் பழைமை வாய்த்த மரங்கள் தொடர்பில் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல். கொழும்பு நகரில் அபாயகரமானது என அடையாளப்படுத்தப்படாத அதிகளவான மரங்களே, முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவிக்கின்றது.அதாவது அடையாளம் காணப்பட்ட 50 முதல் 150 வருடங்கள் பழைமை வாய்த்த சுமார் 200 மரங்கள் ஆபத்தானவை என தாம் முன்னெடுத்த ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபை குறிப்பிடுகின்றது.இந்த மரங்களில் பெரும்பாலானவற்றில் சிதைவுகள் காணப்பட்டமையினால், அவை முறிந்து விழும் அபாயத்தில் இருந்ததாக மாநகர சபை கூறுகின்றது.இவ்வாறு அடையாளம் காணப்பட்ட மரங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதுடன், ஏனைய மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, கடந்த சில நாட்களில் வீசிய கடும் காற்று காரணமாக, கொழும்பு மாநகர எல்லைக்குள் மாத்திரம் சுமார் 50 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.அபாயகரமானது என இதற்கு முன்னர் அடையாளப்படுத்தப்படாத மரங்களே இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக கொழும்பு மாநகர சபை குறிப்பிடுகின்றது.இந்த மரங்களில் அதிகளவானவை, வேரோடு முறிந்து வீழ்ந்துள்ளமை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சபை கூறுகின்றது.குறித்த விடயம் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தெளிவூட்டப்பட்டுள்ளது.இந்த விவகாரம் குறித்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட ஆய்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement