• Aug 09 2025

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - சந்தேகநபர் கைது!

Thansita / Aug 9th 2025, 3:43 pm
image

பொரளை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்பட்ட ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர், பொரளை பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் நிகழ்ந்தபோது, சஹஸ்புர விளையாட்டு மைதானத்தை அலங்கரிக்கும் பணியில் இருந்த இளைஞர்கள் குழுவின்மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சூட்டில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் – களனியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

தற்போது, மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - சந்தேகநபர் கைது பொரளை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்பட்ட ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.கைது செய்யப்பட்டவர், பொரளை பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்பவம் நிகழ்ந்தபோது, சஹஸ்புர விளையாட்டு மைதானத்தை அலங்கரிக்கும் பணியில் இருந்த இளைஞர்கள் குழுவின்மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.இந்தச் சூட்டில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் – களனியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.தற்போது, மூன்று பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கொழும்பு குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement