• May 03 2024

நாட்டில் புற்று நோய்களுக்கு வழங்கப்படும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு..! samugammedia

Chithra / Oct 13th 2023, 8:25 am
image

Advertisement

 

நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கு வழங்கப்படும் இரண்டு முக்கிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

நீரிழிவு மற்றும் புற்றுநோயை எதிர்நோக்கியுள்ள நோயாளர்களுக்கான மருந்துகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. 

இது எமது நாட்டின் சுகாதார துறையை மேலும் வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் செல்கிறது. குறித்த இரண்டு அத்தியாவசிய மருந்துகளை தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தவறியுள்ளது. 

இவ்வாறு அத்தியாவசிய மருந்துகளை வழங்க தவறியுள்ள அரசாங்கம், தரம் குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்து மருந்து மாஃபியா ஊடாக மக்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ் சுமத்தியுள்ளார். 


இதேவேளை, நாட்டில் மருந்து விநியோகம் தொடர்பில், பாரிய நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல முன்பதிவுகளையும் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவுறுத்தியுள்ளார். 

அத்துடன், குறித்த முன்பதிவுகளை இரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார். 

சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாட்டில் புற்று நோய்களுக்கு வழங்கப்படும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு. samugammedia  நீரிழிவு மற்றும் புற்று நோய்களுக்கு வழங்கப்படும் இரண்டு முக்கிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நீரிழிவு மற்றும் புற்றுநோயை எதிர்நோக்கியுள்ள நோயாளர்களுக்கான மருந்துகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இது எமது நாட்டின் சுகாதார துறையை மேலும் வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் செல்கிறது. குறித்த இரண்டு அத்தியாவசிய மருந்துகளை தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தவறியுள்ளது. இவ்வாறு அத்தியாவசிய மருந்துகளை வழங்க தவறியுள்ள அரசாங்கம், தரம் குறைந்த மருந்துகளை கொள்வனவு செய்து மருந்து மாஃபியா ஊடாக மக்களை தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ் சுமத்தியுள்ளார். இதேவேளை, நாட்டில் மருந்து விநியோகம் தொடர்பில், பாரிய நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல முன்பதிவுகளையும் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், குறித்த முன்பதிவுகளை இரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement