• Apr 18 2024

அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – தவிக்கும் மக்கள் .!

Tamil nila / Feb 3rd 2023, 6:30 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள, வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடுகள் நாளாந்தம் அதிகரித்து வருவதாக 

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் வைத்தியர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.


இவ்வாறான மருந்து தட்டுப்பாடுகள் காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே 

அரசாங்கம் உடனடியாக இதனை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் வாசன் இரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அத்துடன் தொழில் வல்லுணர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரியினை மாற்றி அமைக்கப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பாக அடுத்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதன்போது மருந்து தட்டுப்பாடு மற்றும் வரி வசூலிப்பு முறை தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – தவிக்கும் மக்கள் . இலங்கையிலுள்ள, வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடுகள் நாளாந்தம் அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் வைத்தியர் வாசன் இரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.இவ்வாறான மருந்து தட்டுப்பாடுகள் காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அரசாங்கம் உடனடியாக இதனை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் வாசன் இரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் தொழில் வல்லுணர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரியினை மாற்றி அமைக்கப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக அடுத்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இதன்போது மருந்து தட்டுப்பாடு மற்றும் வரி வசூலிப்பு முறை தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement