• May 03 2024

வடக்கில் பக்கவாத நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு! நரம்பியல் வைத்திய நிபுணர் அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Jul 19th 2023, 12:49 pm
image

Advertisement

வடக்கில் பக்கவாதத்துக்குரிய மருந்துகள் தட்டுப்பாடு காணப்படுகின்றமை ஒரு துர்ப்பாக்கிய நிலை என நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளை நான்கரை மணித்தியாலத்திற்குள் அந்த சிகிச்சை வழங்கக்கூடிய ஒரு வைத்தியசாலைக்கு அதாவது நரம்பியல் சிகிச்சை குலாம் உள்ள வைத்தியசாலைக்கு நேரடியாக அந்த நோயாளிகளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதன் மூலம் உடனடியாக உரிய பரிசோதனை மேற்கொண்டு மூளையில் எவ்வாறான தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதனை நாங்கள் இனம் கண்டு அதற்குரிய நடவடிக்கையை எடுக்க முடியும்.

முக்கியமான ஒரு விடயத்தை நான்  தெரிவிக்க விரும்புகின்றேன். 85 வீதமான பக்க வாதம் ஏற்படுவதற்கு காரணம் மூளையில் ஏற்படுகின்ற இரத்த அடைப்பு ஆகும். எனவே இந்த பக்கவாதத்தை குணப்படுத்துவதற்குரிய மருந்துகள் தற்பொழுது உலகளாவிய ரீதியில் வழங்கப்படுகின்றது.

அது யாழ். போதனா வைத்தியசாலையிலும் இது சம்பந்தமான மருந்து சிகிச்சை முறைகள் தற்பொழுது மக்களுக்காக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதிலே தற்பொழுது துர்பாக்கியமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. தற்பொழுது உள்ள பொருளாதார இன்னல் காரணமாக இதற்குரிய மருந்துகளிற்கு சற்று தட்டுப்பாட்டு நிலை காணப்படுகின்றது. 

ஆகவே இந்த தட்டுப்பாடுகளை நாங்கள் கருத்தில் கொள்ளாமல் சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு உரிய  சிகிச்சையினை நாங்கள் வழங்குகின்றோம். 

அதேபோல அவர்களுக்குரிய ஏனைய மருந்து பொருட்களும் இங்கே சேமிப்பில் வைத்திருக்கின்றோம். எனினும் தற்போது இந்த பக்கவாதத்துக்குரிய மருந்து தட்டுப்பாடானது ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.

வடக்கில் பக்கவாத நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நரம்பியல் வைத்திய நிபுணர் அதிர்ச்சி தகவல் samugammedia வடக்கில் பக்கவாதத்துக்குரிய மருந்துகள் தட்டுப்பாடு காணப்படுகின்றமை ஒரு துர்ப்பாக்கிய நிலை என நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் தெரிவித்தார்.இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது  மேற்கண்டவாறு தெரிவித்தார்.ஒரு பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளை நான்கரை மணித்தியாலத்திற்குள் அந்த சிகிச்சை வழங்கக்கூடிய ஒரு வைத்தியசாலைக்கு அதாவது நரம்பியல் சிகிச்சை குலாம் உள்ள வைத்தியசாலைக்கு நேரடியாக அந்த நோயாளிகளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதன் மூலம் உடனடியாக உரிய பரிசோதனை மேற்கொண்டு மூளையில் எவ்வாறான தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதனை நாங்கள் இனம் கண்டு அதற்குரிய நடவடிக்கையை எடுக்க முடியும்.முக்கியமான ஒரு விடயத்தை நான்  தெரிவிக்க விரும்புகின்றேன். 85 வீதமான பக்க வாதம் ஏற்படுவதற்கு காரணம் மூளையில் ஏற்படுகின்ற இரத்த அடைப்பு ஆகும். எனவே இந்த பக்கவாதத்தை குணப்படுத்துவதற்குரிய மருந்துகள் தற்பொழுது உலகளாவிய ரீதியில் வழங்கப்படுகின்றது.அது யாழ். போதனா வைத்தியசாலையிலும் இது சம்பந்தமான மருந்து சிகிச்சை முறைகள் தற்பொழுது மக்களுக்காக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.இதிலே தற்பொழுது துர்பாக்கியமான நிலை ஏற்பட்டிருக்கின்றது. தற்பொழுது உள்ள பொருளாதார இன்னல் காரணமாக இதற்குரிய மருந்துகளிற்கு சற்று தட்டுப்பாட்டு நிலை காணப்படுகின்றது. ஆகவே இந்த தட்டுப்பாடுகளை நாங்கள் கருத்தில் கொள்ளாமல் சிகிச்சை பெற வரும் நோயாளர்களுக்கு உரிய  சிகிச்சையினை நாங்கள் வழங்குகின்றோம். அதேபோல அவர்களுக்குரிய ஏனைய மருந்து பொருட்களும் இங்கே சேமிப்பில் வைத்திருக்கின்றோம். எனினும் தற்போது இந்த பக்கவாதத்துக்குரிய மருந்து தட்டுப்பாடானது ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement