• Sep 08 2024

ஜனாதிபதித் தேர்தலில் பணத்தை வாரி இறைப்பவர்களை அம்பலப்படுத்திய அநுர! samugammedia

Chithra / Jul 19th 2023, 12:56 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பணத்தினை வாரி இறைக்கவே வேண்டியிருப்பதாலேயே, பிரீமா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலுக்கும் மா நிறுவனங்கள் பணம் திரட்டுவதாக அவர் கூறினார்.

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பி அநுர குமார் திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;

உலகச் சந்தையில் கோதுமை மா குறைந்து, கோதுமை தானியங்கள் குறைந்து, டாலரின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், அந்தச் சாதகத்தை நுகர்வோருக்கு மா நிறுவனங்கள் வழங்குவதில்லை. 

ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த மக்களின் பணத்தில் நிதியளிப்பதை நான் அறிவேன். எனவே, இந்த நிறுவனங்களுக்கு வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒருமித்த கருத்து. 

ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பணத்தை இறைத்தவர்கள் இவர்கள்தான். பிரீமா நிறுவனம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி திரட்ட வேண்டியதன் காரணமாக அதிக விலைக்கு மாவினை பாவனையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர்.

இதற்குப் பதில் அளிப்பது பிரதமருக்கும், அவைத் தலைவருக்கும் கடினம் என்பதை நான் அறிவேன் எனத் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் பணத்தை வாரி இறைப்பவர்களை அம்பலப்படுத்திய அநுர samugammedia எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பணத்தினை வாரி இறைக்கவே வேண்டியிருப்பதாலேயே, பிரீமா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலுக்கும் மா நிறுவனங்கள் பணம் திரட்டுவதாக அவர் கூறினார்.நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வியொன்றை எழுப்பி அநுர குமார் திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;உலகச் சந்தையில் கோதுமை மா குறைந்து, கோதுமை தானியங்கள் குறைந்து, டாலரின் மதிப்பு குறைந்து வரும் நிலையில், அந்தச் சாதகத்தை நுகர்வோருக்கு மா நிறுவனங்கள் வழங்குவதில்லை. ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த மக்களின் பணத்தில் நிதியளிப்பதை நான் அறிவேன். எனவே, இந்த நிறுவனங்களுக்கு வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஒருமித்த கருத்து. ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் பணத்தை இறைத்தவர்கள் இவர்கள்தான். பிரீமா நிறுவனம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி திரட்ட வேண்டியதன் காரணமாக அதிக விலைக்கு மாவினை பாவனையாளர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றனர்.இதற்குப் பதில் அளிப்பது பிரதமருக்கும், அவைத் தலைவருக்கும் கடினம் என்பதை நான் அறிவேன் எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement