• Jul 27 2024

சர்வதேச கிரிக்கெட் தரவரிசை: ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஷுப்மன் கில்! samugammedia

Tamil nila / Nov 8th 2023, 5:34 pm
image

Advertisement

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் டோனி, விராத் கோஹ்லிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெற்ற நான்காவது இந்தியர் இவர்தான்.

நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் முதலிரு போட்டிகளில் விளையாடாத ஷுப்மன் கில், அடுத்த ஆறு போட்டிகளிலும் சேர்த்து 219 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் ஆசம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த (49) சாதனையைச் சச்சினுடன் பகிர்ந்துகொண்ட விராத் கோஹ்லி, மூன்று இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா ஆறாமிடத்தில் இருக்கிறார்.

அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். குல்தீப் யாதவ் (நான்காமிடம்), ஜஸ்பிரீத் பும்ரா (எட்டாமிடம்), முகம்மது ஷமி (பத்தாமிடம்) ஆகிய இந்தியப் பந்துவீச்சாளர்களும் ஏற்றம் கண்டனர்.

பங்ளாதேஷ் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.


சர்வதேச கிரிக்கெட் தரவரிசை: ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஷுப்மன் கில் samugammedia ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார்.சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் டோனி, விராத் கோஹ்லிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெற்ற நான்காவது இந்தியர் இவர்தான்.நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் முதலிரு போட்டிகளில் விளையாடாத ஷுப்மன் கில், அடுத்த ஆறு போட்டிகளிலும் சேர்த்து 219 ஓட்டங்களை பெற்றுள்ளார்.முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் ஆசம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த (49) சாதனையைச் சச்சினுடன் பகிர்ந்துகொண்ட விராத் கோஹ்லி, மூன்று இடங்கள் முன்னேறி நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா ஆறாமிடத்தில் இருக்கிறார்.அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். குல்தீப் யாதவ் (நான்காமிடம்), ஜஸ்பிரீத் பும்ரா (எட்டாமிடம்), முகம்மது ஷமி (பத்தாமிடம்) ஆகிய இந்தியப் பந்துவீச்சாளர்களும் ஏற்றம் கண்டனர்.பங்ளாதேஷ் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement