• Nov 25 2024

அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை- அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இல்லை- அமைச்சர் பிரசன்ன சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 5th 2024, 11:49 am
image

அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இருக்காது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

திவுலபிட்டிய பிரதேசத்தில் நேற்று (4) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன

எனக்கு தெரிந்த வரையில் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்டேன். அது நியாயமானது தான். ஏனெனில் மொட்டு வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம். நாட்டைப் பற்றி யோசித்து முடிவு எடுத்தேன். நான் என் முடிவில் நிற்கிறேன்.

தத்தமது சொந்த நிகழ்ச்சி நிரலில் வேலை செய்யும் போது நாட்டைப் பற்றி சிந்திக்க முடியாது. இன்று கட்சிக்கும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. 2022 இல் கட்சியின் தலைமையை வேறு ஒருவருக்கு வழங்கியிருக்கலாம். 

டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி வேட்பாளராக முன்வந்தபோது எமது தலைவர்கள் அவருக்கு ஆதரவளிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த அனுபவம் இல்லை. 

எனவே, எமது தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்தது சரியான முடிவு. ஜனாதிபதி நாட்டை கஷ்டங்களிலிருந்து மீட்டெடுத்த போது உரிமை கோருபவர்கள் ஏராளம். 

ஆனால் பரிசோதனைகளுக்குச் சென்றால், மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள். அதனால்தான், வீண் பேச்சு பேசாமல், நல்ல வேலையைச் செய்தவருக்கு நாட்டைத் திருப்பித் தருவோம் என்று சொல்கிறோம் என்றார்.




 

அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை- அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இல்லை- அமைச்சர் பிரசன்ன சுட்டிக்காட்டு. அரசாங்கத்திற்கு தனிப்பெரும்பான்மை இருப்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் சிக்கல் இருக்காது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.திவுலபிட்டிய பிரதேசத்தில் நேற்று (4) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்னஎனக்கு தெரிந்த வரையில் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்டேன். அது நியாயமானது தான். ஏனெனில் மொட்டு வேட்பாளரை ஆதரிக்க மாட்டோம். நாட்டைப் பற்றி யோசித்து முடிவு எடுத்தேன். நான் என் முடிவில் நிற்கிறேன்.தத்தமது சொந்த நிகழ்ச்சி நிரலில் வேலை செய்யும் போது நாட்டைப் பற்றி சிந்திக்க முடியாது. இன்று கட்சிக்கும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. 2022 இல் கட்சியின் தலைமையை வேறு ஒருவருக்கு வழங்கியிருக்கலாம். டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி வேட்பாளராக முன்வந்தபோது எமது தலைவர்கள் அவருக்கு ஆதரவளிக்கவில்லை. ஏனென்றால் அவருக்கு அந்த அனுபவம் இல்லை. எனவே, எமது தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்தது சரியான முடிவு. ஜனாதிபதி நாட்டை கஷ்டங்களிலிருந்து மீட்டெடுத்த போது உரிமை கோருபவர்கள் ஏராளம். ஆனால் பரிசோதனைகளுக்குச் சென்றால், மக்கள் மீண்டும் வீதிக்கு இறங்குவார்கள். அதனால்தான், வீண் பேச்சு பேசாமல், நல்ல வேலையைச் செய்தவருக்கு நாட்டைத் திருப்பித் தருவோம் என்று சொல்கிறோம் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement