• May 07 2024

காங்கேசன்துறை - நாகைபட்டினம் இடையிலான சேவையில் 'சிவகங்கை' கப்பல்! samugammedia

Chithra / Nov 19th 2023, 11:14 am
image

Advertisement


காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'இந்த்ஶ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின்' (IndSri Ferry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவுத்தார்.

இக்கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன எனவும், இதற்காக இந்திய கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் தமது நிறுவனத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு வந்து சேரும் என்றார் அவர்.

இக்கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் (check in baggage) பயணிக்கலாம்.

ஒரு வழிப் பயணக் கட்டணமாக இந்திய ரூபாவில் 4,250 மற்றும் வரிகளும் அறவிடப்படும். இலங்கை ரூபாவில் 17,000 மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் பிரதான விற்பனை முகவர்களான 'மெற்றோ வொயேஜஸ்' மூலமாகவோ அல்லது அவர்களின் துணை முகவர்களினூடகவோ அல்லது விரைவில் வெளியிடப்பட இருக்கும் android & iOS app மூலமாகவோ கப்பல் பயணத்துக்கான பதிவுகளை மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

காங்கேசன்துறை - நாகைபட்டினம் இடையிலான சேவையில் 'சிவகங்கை' கப்பல் samugammedia காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'இந்த்ஶ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின்' (IndSri Ferry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவுத்தார்.இக்கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன எனவும், இதற்காக இந்திய கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் தமது நிறுவனத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு வந்து சேரும் என்றார் அவர்.இக்கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் (check in baggage) பயணிக்கலாம்.ஒரு வழிப் பயணக் கட்டணமாக இந்திய ரூபாவில் 4,250 மற்றும் வரிகளும் அறவிடப்படும். இலங்கை ரூபாவில் 17,000 மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கையின் பிரதான விற்பனை முகவர்களான 'மெற்றோ வொயேஜஸ்' மூலமாகவோ அல்லது அவர்களின் துணை முகவர்களினூடகவோ அல்லது விரைவில் வெளியிடப்பட இருக்கும் android & iOS app மூலமாகவோ கப்பல் பயணத்துக்கான பதிவுகளை மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement