• May 18 2024

முழங்காவில் மன்னார் பேருந்துகள் வீதியில் ரேஸ்..! - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் samugammedia

Chithra / Nov 19th 2023, 10:36 am
image

Advertisement

 யாழ்ப்பாணம் - மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேரூந்து போட்டி போட்டு முழங்காவில் பேரூந்தை முந்த முயற்சித்துள்ளது.

இதனால் நிலை தடுமாறி அருகில் இருந்த  மரத்தில் மோதவிருந்ததில் நூற்றுக்கணக்கான பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று மதியம் 3 மணியளவில் புறப்பட்ட தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்து கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த மற்றைய தனியார் பேரூந்து சாரதியின் செயற்பாட்டால் நிலை தடுமாறியுள்ளது.

பின்னால் வந்த சாரதி வேகமாக வாகனத்தை செலுத்தியதுடன் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வாகனத்தை செலுத்தியுள்ளார்.

இதன் காரணமாக நிலைதடுமாறிய வாகனம் அருகில் உள்ள மரத்தில் மோதும் விதமாக சென்ற நிலையில் மரத்தை சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேரூந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேரூந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பேரூந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்சியாக மன்னார் - யாழ்பாணம், மன்னார் - வவுனியா வீதிகளில் பேரூந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது, பேரூந்துகளை போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது 


முழங்காவில் மன்னார் பேருந்துகள் வீதியில் ரேஸ். - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் samugammedia  யாழ்ப்பாணம் - மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பேரூந்து போட்டி போட்டு முழங்காவில் பேரூந்தை முந்த முயற்சித்துள்ளது.இதனால் நிலை தடுமாறி அருகில் இருந்த  மரத்தில் மோதவிருந்ததில் நூற்றுக்கணக்கான பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று மதியம் 3 மணியளவில் புறப்பட்ட தனியார் பேரூந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்து கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த மற்றைய தனியார் பேரூந்து சாரதியின் செயற்பாட்டால் நிலை தடுமாறியுள்ளது.பின்னால் வந்த சாரதி வேகமாக வாகனத்தை செலுத்தியதுடன் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வாகனத்தை செலுத்தியுள்ளார்.இதன் காரணமாக நிலைதடுமாறிய வாகனம் அருகில் உள்ள மரத்தில் மோதும் விதமாக சென்ற நிலையில் மரத்தை சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேரூந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேரூந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பேரூந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.தொடர்சியாக மன்னார் - யாழ்பாணம், மன்னார் - வவுனியா வீதிகளில் பேரூந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது, பேரூந்துகளை போட்டி போட்டு செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement

Advertisement