• May 19 2024

சிவனொலி பாதமலைக்கு பணம் இல்லாமல் செல்ல முடியாது..! வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Oct 5th 2023, 2:39 pm
image

Advertisement

 

பருவ காலத்தில் ஹட்டன் மற்றும் இரத்தினபுரி வீதி ஊடாக சிவனொலிபாதமலைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நேற்று முதல் பயணச்சீட்டுகளை வழங்கி வருகிறது.

இவ்வாறு பயணசீட்டு வழங்குவது நியாயமற்ற செயல் என சப்ரகமுவ மாகாண பிரதம சங்க தலைவர் பெங்கமுவே தம்மதின்ன நஹிமியன் தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று (04) பிற்பகல் முதல் நல்லதண்ணி ஊடாக சிவனொலிபாதமலைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 5 டொலர்களும், சார்க் நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 4 டொலர்களும் அறவிடப்படவுள்ளது.

மேலும், பருவ காலத்தில் சிவனொலிபாதமலைக்கு வரும் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு 40 ரூபா கட்டணத்துடன் பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிவனொலி பாதமலைக்கு பணம் இல்லாமல் செல்ல முடியாது. வெளியான அறிவிப்பு samugammedia  பருவ காலத்தில் ஹட்டன் மற்றும் இரத்தினபுரி வீதி ஊடாக சிவனொலிபாதமலைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நேற்று முதல் பயணச்சீட்டுகளை வழங்கி வருகிறது.இவ்வாறு பயணசீட்டு வழங்குவது நியாயமற்ற செயல் என சப்ரகமுவ மாகாண பிரதம சங்க தலைவர் பெங்கமுவே தம்மதின்ன நஹிமியன் தெரிவித்துள்ளார்.அதன்படி நேற்று (04) பிற்பகல் முதல் நல்லதண்ணி ஊடாக சிவனொலிபாதமலைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 5 டொலர்களும், சார்க் நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 4 டொலர்களும் அறவிடப்படவுள்ளது.மேலும், பருவ காலத்தில் சிவனொலிபாதமலைக்கு வரும் உள்ளூர் சுற்றுலா பயணிகளுக்கு 40 ரூபா கட்டணத்துடன் பயணச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement