• Nov 23 2024

வாகன விபத்துகளில் 14 வயதுச் சிறுமி உட்பட 6 பேர் பலி!

Tamil nila / Sep 19th 2024, 9:49 pm
image

அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை, வவுனியா – ஓமந்தை ஆகிய பிரதே சங்களில் கடந்த 24 மணித்தியாலங் களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளமையுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் 4 பேரைத் கைது செய்துள்ளனர் 

அம்பாறை, காரைதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளியில் இருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தந்தை படுகாயமடைந்தமையுடன் அவரது 14 வயது மகளான சிறுமி உயிரிந்துள்ளார்.

படுகாயமடைந்த தந்தை வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டுள்ளார். பஸ் சாரதியைப் பொலி ஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியில் ,கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியில் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை வீதியால் சென்று கொண் டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச்சேர்ந்த அந்தோனி அல்பிரட் அனுஷன் என்ற இளைஞன் உயிரிழந்தான்.

டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவி லுள்ள பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி நேற்று இரவு பயணித்த மோட்டார் சைக்கிள் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத் துக்கு அருகில் வீதி ஓரத்தில் சைக்கிள் ஒன்றுடன் நின்றிருந்தவர் மீது மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த – ஓமந்தை பகுதியைச் சேர்ந்த – 46 மற்றும் 48 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர் என ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வெயாங்கொடை, மினுவாங்கொடை பிரதான வீதியில் 20 ஆவது மைல் கல் பகுதியில் வீதியை குறுக்கறுத்த பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் படுகாயமடைந்த வெயங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் மினுவாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரைப் பொலிஸார் கைது செய்தனர்.

கண்டி- யாழ்ப்பாணம் ஏ-09 வீதி யில் கட்டுகஸ்தோட்டை நகரில் பாதசாரி ஒருவர் மீது கார் மோதிய விபத்தில் 71 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

கார்ச் சாரதியைத் தாங்கள் கைது செய்துள்ளனர் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துகள் இடம்பெற்ற பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்துகளில் 14 வயதுச் சிறுமி உட்பட 6 பேர் பலி அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை, வவுனியா – ஓமந்தை ஆகிய பிரதே சங்களில் கடந்த 24 மணித்தியாலங் களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளமையுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் எனவும் 4 பேரைத் கைது செய்துள்ளனர் அம்பாறை, காரைதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளியில் இருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தந்தை படுகாயமடைந்தமையுடன் அவரது 14 வயது மகளான சிறுமி உயிரிந்துள்ளார்.படுகாயமடைந்த தந்தை வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டுள்ளார். பஸ் சாரதியைப் பொலி ஸார் கைது செய்துள்ளனர்.கிளிநொச்சியில் ,கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியில் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை வீதியால் சென்று கொண் டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச்சேர்ந்த அந்தோனி அல்பிரட் அனுஷன் என்ற இளைஞன் உயிரிழந்தான்.டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவி லுள்ள பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி நேற்று இரவு பயணித்த மோட்டார் சைக்கிள் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத் துக்கு அருகில் வீதி ஓரத்தில் சைக்கிள் ஒன்றுடன் நின்றிருந்தவர் மீது மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த – ஓமந்தை பகுதியைச் சேர்ந்த – 46 மற்றும் 48 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர் என ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.வெயாங்கொடை, மினுவாங்கொடை பிரதான வீதியில் 20 ஆவது மைல் கல் பகுதியில் வீதியை குறுக்கறுத்த பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் படுகாயமடைந்த வெயங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் மினுவாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரைப் பொலிஸார் கைது செய்தனர்.கண்டி- யாழ்ப்பாணம் ஏ-09 வீதி யில் கட்டுகஸ்தோட்டை நகரில் பாதசாரி ஒருவர் மீது கார் மோதிய விபத்தில் 71 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.கார்ச் சாரதியைத் தாங்கள் கைது செய்துள்ளனர் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துகள் இடம்பெற்ற பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களின் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement