• May 21 2024

பொதுஜன பெரமுனவின் 4 விசேட கோரிக்கைகளுடன் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் samugammedia

Chithra / Nov 5th 2023, 4:28 pm
image

Advertisement

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து, உடனடியாக அமுல்படுத்துமாறு கோரியுள்ளது.

சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும், உர மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட ஒதுக்கீட்டை மீள வழங்க வேண்டும், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பின் போது வேலைவாய்ப்பை இழக்கக்கூடாது என்பனவே நான்கு கோரிக்கைகளாகும் என கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

கட்சியின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் இந்த நான்கு கோரிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த பொறிமுறை சமுர்த்தி இயக்கம் எனவும், எனவே இயக்கத்தின் பெயரை மாற்றுவது பொருத்தமானதல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் 4 விசேட கோரிக்கைகளுடன் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம் samugammedia  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து, உடனடியாக அமுல்படுத்துமாறு கோரியுள்ளது.சமுர்த்தி மானியத்தை தொடர வேண்டும், உர மானியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட ஒதுக்கீட்டை மீள வழங்க வேண்டும், அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பின் போது வேலைவாய்ப்பை இழக்கக்கூடாது என்பனவே நான்கு கோரிக்கைகளாகும் என கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.கட்சியின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் இந்த நான்கு கோரிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த பொறிமுறை சமுர்த்தி இயக்கம் எனவும், எனவே இயக்கத்தின் பெயரை மாற்றுவது பொருத்தமானதல்ல எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement