• Sep 17 2024

தும்புத்தூள் என்ற போர்வையில் 2 கோடி பெறுமதியான பீடி இலைகள் கடத்தல்; பொலிஸார் மடக்கிப் பிடிப்பு samugammedia

Chithra / Oct 10th 2023, 1:03 pm
image

Advertisement

 

கற்பிட்டி - மாம்புரி பிரதேசத்தில் இருந்து குளிப்பாட்டிக்கு லொறி ஒன்றின் மூலம் தும்புத் தூள் என்ற போர்வையில் சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 2 கோடிக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகளை கைப்பற்றியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகத்தின் பெயரில் குறித்த லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகல் - அலவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர்  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (10) அதிகாலை 1.00 மணியளவில் மதுரங்குளி நகரில் வைத்து லொறியொன்றை சோதனை செய்த போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தும்புத்தூள் என்ற போர்வையில் 2 கோடி பெறுமதியான பீடி இலைகள் கடத்தல்; பொலிஸார் மடக்கிப் பிடிப்பு samugammedia  கற்பிட்டி - மாம்புரி பிரதேசத்தில் இருந்து குளிப்பாட்டிக்கு லொறி ஒன்றின் மூலம் தும்புத் தூள் என்ற போர்வையில் சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 2 கோடிக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகளை கைப்பற்றியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன், சந்தேகத்தின் பெயரில் குறித்த லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குருநாகல் - அலவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர்  ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (10) அதிகாலை 1.00 மணியளவில் மதுரங்குளி நகரில் வைத்து லொறியொன்றை சோதனை செய்த போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement