இரத்தினபுரி - கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 13 வயதுடைய ரங்வல, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் இந்த துயரம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவனின் தந்தையும், மற்றுமொரு நபரும் இணைந்து பலா மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த போது, மரத்தின் கிளையொன்று அருகில் இருந்த சிறுவனின் தலையில் விழுந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் கொடகவெல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பலா மரத்தை வெட்டிய தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - மகன் பரிதாபச் சாவு இரத்தினபுரி - கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மடுவ பிரதேசத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கொடகவெல பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தில் 13 வயதுடைய ரங்வல, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளார்.நேற்று பிற்பகல் இந்த துயரம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவனின் தந்தையும், மற்றுமொரு நபரும் இணைந்து பலா மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த போது, மரத்தின் கிளையொன்று அருகில் இருந்த சிறுவனின் தலையில் விழுந்துள்ளது.இதன்போது படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் கொடகவெல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.