• Jan 06 2025

தாயைத் தாக்கிக் கொன்ற மகன்! இலங்கையில் இன்று நடந்த கொடூர சம்பவம்

Chithra / Dec 15th 2024, 11:12 am
image


கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிசோகொட்டுவ பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்துள்ளார்.

இன்று (15) அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்பாய, பல்லேபெத்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், 

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணிகளுக்காக வந்திருந்த இரண்டு பணியாளர்களுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவர் மற்றைய நபரை அடித்துக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 2ஆவது ஒழுங்கை பகுதியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜூபிலி மாவத்தை, வயிக்கால பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

தாயைத் தாக்கிக் கொன்ற மகன் இலங்கையில் இன்று நடந்த கொடூர சம்பவம் கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிசோகொட்டுவ பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்துள்ளார்.இன்று (15) அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.கல்பாய, பல்லேபெத்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, கட்டிடம் ஒன்றின் நிர்மாணப் பணிகளுக்காக வந்திருந்த இரண்டு பணியாளர்களுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவர் மற்றைய நபரை அடித்துக் கொன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 2ஆவது ஒழுங்கை பகுதியில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஜூபிலி மாவத்தை, வயிக்கால பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.கொலைச் சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement